தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது. எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கிறார்கள்.

தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை, 2011 நவம்பர் 28-ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக, இதற்காக தமிழக அரசு தனி வழக்கறிஞரை நியமித்தது. இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ''போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது'' என்று அதிர்ச்சிகரமான தீர்ப்பை கடந்த 30-ம் தேதி இலங்கை நீதிமன்றம் வழங்கியது.

இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் மற்றும் ஜேசுராஜிடம் பேசினோம். ''விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவுவதாக இலங்கை அரசு கூறி வந்தது. 2009-க்குப் பிறகு விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என்று பூரித்தார் அதிபர் ராஜபக்ஷே. ஆனால், அதன் பிறகுதான் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருந்தது. 2011-ல் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்களைப் பிடித்து, பொய் வழக்குப் போட்டு அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டனர். தமிழக அரசு, அந்த ஐந்து பேருக்கும் தனி வழக்கறிஞரை நியமித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் 2,500 ரூபாய் நிவாரணம் வழங்கி வந்தது. அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்காக தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான், அவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது. இந்த ஐந்து பேருடன் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 3 தமிழ் மீனவர்களும் இந்த ஐந்து பேரையும் பார்த்ததே இல்லை என்று விசாரணையின்போது கூறினர். ஆனால், அதை எல்லாம் நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் ஒருதலைபட்சமாக தூக்குத் தண்டனையை வழங்கியிருக்கிறது. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை விடுவித்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைகுறித்து, தீர்ப்பாயம் கடந்த வாரம் குன்னூரில் நடத்திய இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது உள்நோக்கம் கொண்டது என்று விவாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய, மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''தமிழக அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், மத்திய அரசும் அதற்கான முழு ஒத்துழைப்பை அளிக்கும்'' என்று கூறினார். ''இந்த வழக்கில், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்வோம்'' என்று உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி