எஸ்.பூவேந்த அரசு, சின்னத்தாராபுரம்.

சாதிக்க நினைப்பவர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்ளுங்கள். அடிபட்டவர்கள்தான் அண்ணாந்து பார்க்கும் நிலைக்குப் போனார்கள். அவமானப்படுத்தப்பட்டவர்கள்தான் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு உயர்ந்து நின்றார்கள்.

'ஒரு வாளித் தண்ணீரில் ஒரு துளியைவிடக் குறைவாக இருந்தது எங்களது குடும்பத்து வருமானம்’ என்று சார்லி சாப்ளின் எழுதி இருக்கிறார். அவரது இளம்வயது குடும்ப நிலைமை அதுதான். சிறுவயதில் குழந்தைத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்து பசியைப் போக்கியவர். குடிகார அப்பா, அவரது தாய்க்கு பைத்தியம் என்று மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு தொல்லை கொடுத்தவர். 'எங்களது வறுமையின் அவமான முத்திரை குறித்து தெளிவாகத் தெரியும்’என்று சாப்ளின் எழுதி இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் சாப்ளின் என்ற கலைஞன் முளைத்தான்.

உலகப் புகழை அடைந்த பிறகாவது அவருக்கு துன்பங்கள், தொல்லைகள் நின்றதா என்றால் இல்லை. 'கம்யூனிஸ்ட் ஒற்றன்’ என்றும் 'வெளிநாட்டுக்காரன்’ என்றும் 'பிரச்னைகளைக் கிளப்புபவன்’ என்றும் புகார் மீது புகார்கள் அவர் மீது சொல்லப்பட்டன. 'தி கிரேட் டிக்டேட்டர்’ கதையையே திருட்டுக் கதை என்று சொல்லி நீதிமன்றத்துக்கு அலைக்கழித்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் தனது கலையைக் கைவிடாமல் தொடர்ந்தார். சலிக்காமல் போராடினார். மூலையில் முடங்கவில்லை.

''என்னுடைய மிகப்பெரிய தவறு நான் ஒரு சுதந்திரமான மனிதனாக இருந்ததுதான்'' என்று சொல்லிக்கொண்டாலும் சுதந்திரமான மனிதராகவே வாழ்ந்தார். ஏற்றுக்கொண்ட இலக்கில் நம்பிக்கை வைத்து பயணப்பட்டால் எந்தத் தடையையும் வெல்லலாம் என்பதே வாழ்க்கைப் பாடம்!

அம்மாபிரியன், மதுரை.

சசிகலா உடன் இல்லாமல் இருந்திருந்தால், சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா மீது வந்திருக்காது அல்லவா?

அதாவது, சசிகலா பெயரில் மட்டும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் இருந்திருந்தால் நீங்கள் அப்படிச் சொல்லலாம். ஜெயலலிதா பெயரில் அல்லவா சொத்துகள் இருக்கின்றன? ஆக, சுயசிந்தனை இல்லாமலா இத்தனை சொத்துகளை ஜெயலலிதா வாங்கி இருக்க முடியும்?

பி.அருணன், சிந்தாமணி.

ஜெயலலிதாவின் அமைதி?

வேறு வழி? கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வருகின்ற வரை அவர் அமைதியாகத்தானே இருந்தாக வேண்டும்!

இந்தக் காலகட்டத்தை அவர் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே அந்த அமைதிக்கான அர்த்தம் இருக்கும்!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

அனைத்து தமிழகக் கட்சிகளும் பால் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் அறிவித்துள்ளனேவே. முதல்வர் பன்னீர் எப்படி சமாளிப்பார்?

இது என்ன பெரிய விஷயம், காதை மூடிக்கொள்ள வேண்டியதுதானே?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியலில் எதற்கு விதிவிலக்கு கிடையாது?

வெட்கம் கெடுவதற்கு விதிவிலக்கு கிடையாது.

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

'நேரு குடும்பத்தைச் சாராத நபர் தலைமை ஏற்கும் காலம் வர வேண்டும்’ என்று ப.சிதம்பரம் சொல்லியிருப்பது பற்றி?

ப.சிதம்பரம் சொல்லியிருப்பதில் தவறு என்ன இருக்கிறது?

ஜி.சதாசிவம், கைலாசபுரம்.

மறைந்த எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் பற்றி?

கள ஆய்வு செய்து நாவல்கள் படைப்பதில் அவர் காட்டிய அக்கறை அனைவராலும் பின்பற்றத் தக்கது. இருண்மை இலக்கியம் படைப்பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. நீலகிரியில் வசிக்கும் படுகர்களின் வாழ்வுச் சூழலை பின்னணியாக வைத்து 'குறிஞ்சித் தேன்’ படைத்தார். தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வை பின்னணியாக வைத்து 'கரிப்பு மணிகள்’ எழுதினார். பீகாரில் இருந்த பிரபல திருடன் டாகுமான்சியை சந்தித்து அவர் எழுதியதுதான் 'முள்ளும் மலரும்’. தஞ்சை விவசாய மக்களுக்காகப் போராடிய மணலூர் மணியம்மாவைப் பற்றி எழுதுவதற்காக அந்த மாவட்டம் முழுக்கவே அலைந்தார். ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய உண்மையான அக்கறை இது. பின்னி மில் எங்கே இருக்கிறது என்றே தெரியாதவர்கள் எல்லாம் அதுபற்றி நாவல் எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில், ராஜம் கிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் மெச்சத் தகுந்தவர்கள்.

கு.மனோகரப்பாண்டியன், கோட்டார்.

ஜெயலலிதாவின் சிறைவாசம் பற்றி பிரபல ஜோதிடர்கள் யாரும் முன்கூட்டியே கணிக்கவில்லையே?

கணித்திருந்தாலும் வெளியில் சொல்ல பயந்திருப்பார்கள்.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்.

அரசியலில் எதைத் தொலைத்தால் கண்டுபிடிக்க முடியாது?

மானத்தைத் தொலைத்தால் கண்டே பிடிக்க முடியாது. பல பேர் அதைத் தொலைத்துவிட்டுத்தான் எங்கெங்கோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.