Published:Updated:

இனி தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி: விஜயகாந்த்

இனி தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி: விஜயகாந்த்
இனி தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி: விஜயகாந்த்
இனி தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி: விஜயகாந்த்

ஊட்டி: இனி நான் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன்.தெய்வத்துடன் தான்  கூட்டணி வைப்பேன்;தெய்வம் என்பது மக்கள்தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கூறியுள்ளார்.

ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த்,"மக்கள்  பிரச்னைக்காக நான் மாவட்டம் மாவட்டமாகப் போய் பேசி வருகிறேன். இங்கும் கூட  நான் வந்தபோது, தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்துக் கூறினார்கள்.  அவர்களுக்காக நான் குரல்கொடுக்கிறேன்.

பல்வேறு இடங்களுக்குச் சென்று பேசும்போதும் இங்குள்ள தேயிலைத் தோட்ட  விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை குறித்துப் பேசி வருகிறேன். ஆனால்,  இங்கேயே இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, ஏன் இதுகுறித்து  எதுவும் பேசவில்லை,நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மேலும், மற்ற கட்சிகளுக்கு பணம் மட்டும்தான் குறிக்கோள்.ஆனால் தேமுதிகவுக்கு  சேவை மட்டுமே குறிக்கோள்.

##~~##
தமிழகத்தில் ஒவ்வொரு முறை திமுகவும் அதிமுகவும் மாறும்போது, திமுக போலீசும்  அதிமுக போலீஸுமாக செயல்படுகின்றன. ஏன் இப்போதும், திமுக போலீசாக அதிமுக  போலீஸாக போலீஸார் உள்ளனர். இந்த நிலை மாறும்போதுதான் தமிழ்நாடு உருப்படும்.
வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டபோது, அதற்காகக் குரல் கொடுத்த  பிரதமர் மன்மோகன்சிங்,தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது குரல்கொடுக்காதது  ஏன்?”என்றார்.