நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில் இளைஞர்கள் இருவர்...

''என்னடா ஆச்சர்யமா இருக்கு... எப்பவும் எட்டு மணி வரைக்கும் தூங்குறவன், அடிக்கிற குளிர்ல ஆறு மணிக்கு ஈர சட்டையோட கோயிலுக்கு வந்திருக்கே...?''

''தெனமும் பொழுது விடியுறதுக்கு முன்னாடி குளிச்சுட்டு, ஈரத்தலையோட ஆஞ்சநேயரைக் கும்பிட்டா நினைச்சதெல்லாம் நடக்கும்னு ஒரு புக்ல படிச்சேன்!''

''புத்தகத்துல படிச்சியா... இல்லை உங்க ஹவுஸ் ஓனர் பொண்ணு சொல்லுச்சா? போற போக்கைப் பார்த்தா வாடகை மிச்சமாகிடும்போல இருக்கே!''

(அசடு வழிகிறார் ஈரச் சட்டை இளைஞர்)

- த.அருள், நொய்யல்

மயிலாடுதுறை டீக்கடையில் நண்பர்கள் இருவர்...

'எங்க தலைவரைப் பார்த்த இல்ல... புரட்சிப் போராட்டம்னு களத்துல இறங்கிட்டாரு! இனிதான் அவரோட ஆட்டமே ஆரம்பம்!''

''கல்யாண் ஜூவல்லரிக்குப் போட்டியா கலைஞர் ஜூவல்லரி எதாவது வரப்போகுதா மாப்ளே?''

நண்பரும் விடாமல், ''ஆமாடா... இது எங்க கட்சி! எங்க உரிமை! உனக்கென்ன போய் பொழப்பை பாரு!''

- த.ச.பாலாஜி, மயிலாடுதுறை.

கோடம்பாக்கம் டாஸ்மாக் பார் ஒன்றில்...

''மச்சான் சைடிஷ் வெச்சிருக்கிற பேப்பர்ல பாரேன்... புது டி.ஜி.பி போட்டோ போட்டிருக்காங்க!''

''பழைய டி.ஜி.பி-யை தமிழக அரசோட ஆலோசகராக ஆக்கிட்டாங்கபோல இருக்கே!''

''இனி தமிழ்நாட்டுக்கு டி.ஜி.பி ஒருத்தர்... மக்கள் டி.ஜி.பி ஒருத்தர்னு சொல்லு!''

''ஃபுல் அடிச்சாதான் உனக்கு கருத்து கன் மாதிரி வருது மச்சி!''

- ஆர்.சபரிவாசன், சூளைமேடு.

கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இருவர்...

''இந்த ரயில் மெட்ராஸ் போகுங்களா...?''

''போகும்... ஆனா நீங்க போக முடியாது!''

''ஏனுங்க?''

''இதுக்குப் பேரு பிரீமியம் ரயில். இதுல போறதுன்னா ஃபிளைட்ல போற அளவுக்கு பணத்தைக் கொடுத்து முன்னாடியே பதிவு பண்ணி வைக்கணும்.! ஆனா ஒரு வசதியும் இருக்காது!''

''அப்படிங்களா?''

''அட ஏய்யா.. வயித்தெரிச்சலை கிளப்புற...? தெரியாம இந்த கருமத்துல டிக்கெட் புக் பண்ணி என் பொண்டாட்டிகிட்ட வாங்கிக்கட்டிகிட்டு இப்போதான் வந்திருக்கேன்!''

(நொந்தபடியே நகர்கிறார்)

- கே.சுப்புலட்சுமி, ஆர்.எஸ்.புரம்.