Published:Updated:

தேர்தல் வெற்றி: திமுக எம்.எல்.ஏ. பெரியகருப்பன் மீதான வழக்கு தள்ளுபடி!

சென்னை:  திமுக எம்.எல்.ஏ. பெரியகருப்பன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது  செல்லாது என அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை  நீதிமன்றம் இன்று  தள்ளுபடி செய்தது.

கடந்த சட்டசபைத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் பெரியகருப்பன்  போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி,திருப்பத்தூர்  தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சந்தான கிருஷ்ணன் என்பவர், சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

##~~##
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகாததால்  மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.