Published:Updated:

பெண்ணைக் கடத்திச்சென்று வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

பெண்ணைக் கடத்திச்சென்று வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!
பெண்ணைக் கடத்திச்சென்று வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

மைனர் பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம்செய்த வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்திருக்கிறது அரியலூர் நீதிமன்றம்.

அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். அதே கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணான ராதிகாவை (பெயர் மாற்றம்) ரகுவரன் காதலித்துவந்துள்ளார். அப்போது, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் ராதிகா. இதையடுத்து, ராதிகாவின் வீட்டிலும் பேசியிருக்கிறார். அப்போது, அவரைக் கடுமையாகத் திட்டி அனுப்பியிருக்கிறார்கள் ராதிகாவின் பெற்றோர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ராதிகாவைக் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ரகுவரன். இதனிடையே, ராதிகாவைத் திருமணம் செய்துகொள்ள ரகுவரன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா, அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரகுவரனைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு, அரியலூர் குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இப்போது, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முத்துகிருஷ்ணன், குற்றவாளி ரகுவரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ரகுவரனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.