Published:Updated:

ராஜாவுக்கு சளைத்தவரல்ல பிரதமர்: பா.ஜனதா

ராஜாவுக்கு சளைத்தவரல்ல பிரதமர்: பா.ஜனதா
ராஜாவுக்கு சளைத்தவரல்ல பிரதமர்: பா.ஜனதா
ராஜாவுக்கு சளைத்தவரல்ல பிரதமர்: பா.ஜனதா

புதுடெல்லி :நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், பிரதமர் பதவியை  ராஜினாமா செய்ய மறுப்பது,2ஜி ராஜாவுக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல பிரதமர்  மன்மோகன் சிங் என்பதையே காட்டுகிறது என்று பா.ஜனதா கூறியுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவைஎதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த  தலைவருமான அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில்,"2ஜி ஸ்‌பெக்ட்ரம் முறைகேட்டில்  முக்கிய பங்காற்றிய முன்னாள் அமைச்சர் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதையே, இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் மேற்கொள்ள  வேண்டும் என்பதையே பா.ஜனதா கட்சி விரும்புகிறது.

##~~##
தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு.ஊழலில் திளைத்து  வருகிறது.ஊழலில் சிக்கும் தங்கள் கட்சியினரை சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்தி,  ஊழல் புகார்களிலிருந்து தப்ப வைத்து விடுகிறது” என்றார்.