Published:Updated:

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை – அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை – அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை – அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை – அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

'புதுச்சேரியில், ஆறு மாத காலத்திற்குள் டீ கப் உள்ளிட்ட ப்ளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்யவிருக்கிறோம்' என்று சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிலையான திடக்கழிவு மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கந்தசாமி, ”புதுச்சேரியில் 13 லட்சம் மக்கள்தான் வசிக்கின்றனர். அப்படி இருந்தும் சுற்றுச்சூழலும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஏரி, குளங்களை ஆழப்படுத்த நிதி அளித்துள்ளது. ஆனாலும் புதுச்சேரியில் இரு அதிகார மையங்கள் இருப்பதால், ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவுசெய்ய முடியவில்லை. 

இன்னும் இரண்டு வாரத்தில், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் இணைந்து, அந்தந்தப் பகுதியைச் சுத்தம்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. யாரையும் காப்பி அடித்துச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் கடந்த ஓராண்டாகக் காத்திருந்தேன். நான்தான் சுத்தம்செய்கிறேன் என்று வீடியோவுடன் சென்று  சில இடங்களைச் சுத்தம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் சென்ற பிறகு, அந்த இடம் சுத்தமாக இருப்பதில்லை. புதுச்சேரியில்  ஆறு மாத காலத்திற்குள் டீ கப் உள்ளிட்ட ப்ளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யவிருக்கிறோம்” என்றார். 

தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, “கொஞ்சம் பேர் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுவிடக்கூடாது என்றும், தாம் மட்டும் நகரப் பகுதியில் சௌகரியமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்திலும் உள்ளனர். அவர்கள்தாம் பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகி குருமாம்பேட்டில் மேற்கொள்ளப்பட இருந்த குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியைத் தடுத்து நிறுத்திவிட்டனர். மாநிலத்தில் அதிகாரத்தில் இருப்பவர் (கிரண்பேடி), அமைச்சர்களுக்குத் தண்டனை தர வேண்டும் என்கிறார். அப்படிக் கிடைத்தால், எங்களோடு சேர்ந்து அவருக்கும்தான் கிடைக்கும். புதுச்சேரியில் துறைமுகம் செயல்பாட்டிற்கு வர முகத்துவாரத்தில் மணல் தூர்வாரப்பட வேண்டும். அப்போது கொஞ்சம் மணல், நீண்ட காலமாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கடலில் கலக்கப்பட்டதால் கருப்பாக வந்தது. உடனே கொஞ்சம் பேர் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கோஷம் எழுப்பியுள்ளனர். புதுச்சேரி வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தை கொண்டுவந்தாலும் தடுத்து நிறுத்துகின்றனர். கங்கை நதியில் கூட கழிவுநீர் கலக்கப்டுகிறது. குஜராத் மாநிலம் சூரத் காந்தி நகரில், மேம்பாலத்தின் கீழ் குடிசைகளில் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக நடுரோட்டில் நிற்கின்றனர். ஆனால், புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. புதுச்சேரி மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு