Published:Updated:

பண மதிப்பிழப்பு விவகாரம்..! மத்திய அரசை கடுமையாகச் சாடிய மம்தா பானர்ஜி

''பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். தற்போது ஒன்றும் வெளிவரவில்லை'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

பண மதிப்பிழப்பு விவகாரம்..! மத்திய அரசை கடுமையாகச் சாடிய மம்தா பானர்ஜி

'பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், 99 சதவிகிதம் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டது' என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசை கடுமையாக சாடிப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக முதன் முதலில் குரல் எழுப்பியது நாங்கள்தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள் ஆகியோர் தங்களது உயிரை இழக்க நேரிட்டது.

இந்த நடவடிக்கையால், 3 லட்சம் கோடி ரூபாய் ஜி.டி.பி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னுள்ள மறைமுகக் காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் நாட்டு மக்களுக்கு சரியான தீர்ப்பு அளிக்க வேண்டும். மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 99 சதவிகிதப் பணம் வங்கிகளுக்குத் திரும்பச் சென்றுள்ளது. ஒரு சதவிகிதப் பணம் மட்டுமே திரும்பவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் வெளிவரும் என்று தெரிவித்தார்கள். ஆனால், தற்போது ஒன்றும் வெளிவரவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு