Published:Updated:

அமைதிகாத்துவந்த முன்னாள் அமைச்சரின் பதவியைப் பறித்த தினகரன்!

அமைதிகாத்துவந்த முன்னாள் அமைச்சரின் பதவியைப் பறித்த தினகரன்!
அமைதிகாத்துவந்த முன்னாள் அமைச்சரின் பதவியைப் பறித்த தினகரன்!

அமைதிகாத்துவந்த முன்னாள் அமைச்சரின் பதவியைப் பறித்த தினகரன்!

தூத்துக்குடி அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்துவந்த சி.த.செல்லப்பாண்டியன் மாற்றப்பட்டு, மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்டச் செயலாளராக ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சுந்தரராஜன் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளராக இரா.ஹென்றியை அறிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

தூத்துக்குடி அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்துவந்தவர், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன். சசிகலாவின் ஆதரவில் கட்சியில் வேகமாக வளர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிரிந்தபோதும் அணிகள் இணைப்பிற்குப் பின்பு ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணியாக தற்போது உள்ள நிலையிலும் எந்த அணியிலும் தான் இருப்பதைப்போல காட்டிக்கொள்ளாமல் அமைதிகாத்துவந்தார் சி.த.செல்லப்பாண்டியன். ஆனால், அ.தி.மு.க எல்லாம் ஒன்றுதான். அனைத்து அணிகளும் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் எனச் சொல்லிக்கொண்டிருந்த இவர்,  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், சில நாள்களுக்கு முன் தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் உருவபொம்மையை எரித்தபோது  எதிர்ப்பையும் ஆதரவையும் காட்டாமல் அமைதிகாத்துவந்தார்.

எந்த அணி வலுவாக கட்சியைக் கைப்பற்றுகிறதோ, அதில் இணையலாம் என்பதால் இவர் அமைதிகாத்து வருவதாகச் சொல்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள். இவரது அமைதி, தினகரனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு, ஸ்லீப்பர் லிஸ்டில் உள்ள அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் தொடர்ந்து நெருக்கம்காட்டி வந்ததாலும், மாவட்டச் செயலாளர்  பொறுப்பிலிருந்து செல்லப்பாண்டியன் தூக்கியடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் உள்ளூர் அ.தி.மு.க-வினர். அதோடு, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக இருந்துவந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, வடக்கு மாவட்டச் செயலாளராக ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.,  சுந்தர்ராஜனையும், தெற்கு மாவட்டச் செயலாளராக இரா.ஹென்றியையும் அறிவித்துள்ளார் தினகரன். ஆரம்பத்திலிருந்தே தினகரனுக்கு ஆதரவு அளித்துவந்ததால், சுந்தரராஜனுக்கும், தூத்துக்குடி அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்த ஹென்றிக்கும் பதவி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

அடுத்த கட்டுரைக்கு