Published:Updated:

”பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ?” மத்திய அரசை விளாசும் நாராயணசாமி

”பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ?” மத்திய அரசை விளாசும் நாராயணசாமி
”பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ?” மத்திய அரசை விளாசும் நாராயணசாமி

”பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ?” மத்திய அரசை விளாசும் நாராயணசாமி

'பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?' என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தது. அதற்கு, கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்ற காரணத்தையும் சொன்னது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ”செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகிதம் திரும்பி வந்துவிட்டது” தெரிவித்திருப்பது பொதுமக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கின்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “தீவிரவாதிகளிடம் அதிகப் பணம் இருக்கிறது. அதனால், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரப் போவதாகவும், கள்ளநோட்டை ஒழிப்பதாகவும் கூறி, ஒரேநாள் இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால் இந்த அறிவிப்பு, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், தவறான முடிவு என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூறினார்கள். அவர்களின் கூற்றை நிரூபிக்கும் வகையில், நாட்டில் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் ஒரு சதவிகிதமான 16 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமிருந்த 15 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப வந்துவிட்டது. ஆனால், புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க, இதுவரை 26 ஆயிரம் கோடி ருபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு திட்ட அறிவிப்பால் நாட்டிற்கு நஷ்டம்தானே தவிர லாபம் இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. அதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.4 சதவிகிதம் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்புத் திட்ட அறிவிப்பால், ஏழைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதற்கான தார்மீகப் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது எழுந்துள்ளது. மத்திய அரசைப் பொறுத்தவரை, தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதியையும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதியையும் கடைபிடித்துவருகிறது. ஹரியானாவில் சாமியார் கைதுசெய்யப்பட்டதையடுத்து நடைபெற்ற கலவரத்தை, மாநில அரசு சரியாகக் கையாளவில்லை எனக் குற்றம் சுமத்தியது மத்திய அரசு.

அதேசமயம், பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம் கோரக்பூரில், இதுவரை நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றது. ஹரியானா கலவரம் மற்றும் கோரக்பூர் சம்பவங்களுக்கு, அந்தந்த மாநில முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அனைவரும் எதிர்க்கட்சி ஆட்சிசெய்யும் மாநிலங்களைக் குறைகூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்' என்று தெரிவித்தார். 

அடுத்த கட்டுரைக்கு