Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி.

நாகர்கோவில்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி அமோக வெற்றி பெறும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி. கூறியதாவது:

தி.மு.க. தலைவர் கலைஞர். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இரவு, பகலாக மாநாட்டு பணிகளைத் தொடர்ந்தார். டெசோ மாநாடு வெற்றி பெற்று விட்டது. தி.மு.க. தலைவர் கலைஞர் வாழ்க்கை எல்லாமே போராட்டம் தான். கலைஞர் மக்களுக்காக நின்று போராடிய தலைவர். அவர் போராட்டத்துக்கு சளைத்தவர் அல்ல. நீதி வெற்றி பெற்ற மாநாடு டெசோ மாநாடு. இந்த மாநாட்டை கலைஞர் தேர்தலுக்காக செய்கிறார் என்று பழிபோட்டார்கள். அவர்கள் யார் என்றால் சுப்பிரமணியசாமி, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த நெடுமாறன், வைகோ, கலைஞரை முற்றும் முதலுமாக எதிர்க்கக்கூடிய இலங்கை அதிபர் ராஜபக்சே போன்றோர்தான்.

இலங்கையில் வாழக்கூடிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை இருக்கிறதா? எனவே எது அரசியல் நாடகம்? எது அரசியல் விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக, ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ வழியின்றி திண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு எத்தனையோ அச்சுறுத்தல்கள் ஏற்படுகிறது. தமிழ் என்ற மொழியே அங்கு இருக்கக்கூடாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இன அழிப்பு நடந்து வருகிறது. தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகிறது.

தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுகிறது. தமிழர்கள் முகமற்றவர்களாக வாழும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த மக்களுக்கு வாழ்வு கிடைக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாடுதான் டெசோ மாநாடு.

தமிழகத்தில் அனைத்துப் பொருட்களுக்கும் விலையேற்றம் கடுமையாக இருக்கிறது. தமிழகம் சறுக்கிக்கொண்டே போகிறது. முன்பு தமிழகத்தில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டை தற்போது 10 மணி நேரமாக உயர்த்தி தந்திருக்கிறார்கள்.

எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்கும். அதற்கான பாதையை அவர்களே அமைத்துக்கொண்டனர். 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்.

நமது அடையாளம் தமிழ் மொழி. நமது உணர்வு, வாழ்வு தமிழ் மொழியால். தமிழுக்காக, தமிழர்களுக்காக பாடுபடும் கலைஞர் வழியில் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.