Published:Updated:

பத்தவெச்சுட்டியே பரட்ட...

கவிதை வரும்!படம்: சு.குமரேசன்

பத்தவெச்சுட்டியே பரட்ட...

நீ, திரையுலகின் கலைக்காவிரி

தோன்றியது கர்நாடகா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சங்கமித்தது

தமிழனின் இதயக்கடலில்!

நீ

இங்கே தோன்றாது போயிருந்தால்,

திரை அகராதியில்

'ஸ்டைல்’ என்ற வார்த்தை

நீக்கப்பட்ட பகுதியாகி இருக்கும்.

உன்னுடைய புகழுக்கு,

ஊறு விளைவிக்க

நினைத்தார்கள் சிலர்...

நினைக்கிறார்கள் சிலர்...

அவர்களெல்லாம்

சோடா புட்டிக்குள்

புயலை அடக்க

சோதனை பார்த்தவர்கள்

ஜோசியம் கேட்டவர்கள்.

அரசியல் பண்ணத் தெரியாது உனக்கு...

ஆனாலும் இந்திய அரசியல்

உன்னை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது!

பாரதப் போரில்

யுத்தம் செய்யாத

பரந்தாமனைப்போல்

அரசியல் போரில்

எந்த ஆயுதத்தையும் நீ எடுக்கவில்லை...

ஆனால்,

உன் விஸ்வரூப தரிசனத்தை

உலகுக்குக் காட்டவேண்டிய

வேளை வந்துவிட்டது...

எனக்குப் புரிகிறது

ஊருக்குப் புரிகிறது...

தலைவா,

உனக்குப் புரியவில்லையா?

- எஸ்.கதிரேசன்

தலைவா .....

ஏன் சிரிக்கிறாய்

எதற்கு சிரிக்கிறாய் ?

என்பதையும் தாண்டி

நீ எப்படியோ

சிரிக்கிறாய்....!

- கே.ஜெயசுதா

அன்னாந்து மேலே பார்ப்பார்

அமைதியாய் மோவாய் தேய்ப்பார்

தன் படம் திரை வரும்போது

தானாக இதயம் திறப்பார்

ரசிகர்களைத் திமிர வைப்பார்

தலைவர்களைத் திணற வைப்பார்

படம் வெளியான மறுகணமே

பேசியதை மறந்திருப்பார்

மறுபடியும்

அன்னாந்து மேலே பார்ப்பார்......

சிரிப்பாய் சிரிப்பது

அவரல்ல......!

- இளங்கோ கணேசன்

வாய்விட்டுச் சிரித்தால் மட்டும் போதாது...

தலைவா எங்கள் அரசியல் ஆசையென்னும்

நோய்விட்டுப்போக  நீ

வாய்விட்டுச் சொல்லு

வருவேன் என்று...

- முகவை பாஸ்கரன்

வாய்ப்புகள் தெரியுதுன்னு  

நாங்கள் வெறிக்க...

வாய்ப்பல் தெரிய

நீங்க சிரிக்க...

அட பத்தவெச்சுட்டியே பரட்ட...

- பெ.மோகன்ராம்