Published:Updated:

6 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

6 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
6 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
6 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, பிரதமர் தனது பதவியை  ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள பா.ஜனதா  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரண்டு  அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கேடி இழப்பு ஏற்பட்டு   இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையில் குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.இதனால் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி  வரும் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு  வருவதால்,நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்  சிங் விளக்க அறிக்கை தாக்கல் செய்து,நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு  நடைபெற்றதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியிருந்தார்.

##~~##
இருப்பினும் பிரதமரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள பா.ஜனதா, அவர் பதவி  விலகும்வரை நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறிய நிலையில்,  இன்றும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து  ஒத்திவைக்கப்பட்டன.
முதலில் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,மீண்டும்  கூடியபோதும் அதே நிலை நீடித்ததால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

2 மணிக்கு அவை கூடியபோதும் அதே நிலை நீடித்ததால், வியாழன் வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாளை ஒணம் பண்டிகை என்பதால், நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.