Published:Updated:

பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்: கருணாநிதி

பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்: கருணாநிதி
பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்: கருணாநிதி
பிரணாப் சொன்னதை நம்பித்தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்: கருணாநிதி

சென்னை:  இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னதை நம்பித்தான் எனது உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள "அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, திமுகவையும், என்னையும் திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்கள்தான்.

இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு நான்தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

"இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவர்' என்று இறுதி யுத்தம் நடைபெற்ற 2009-ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

##~~##
இப்படியெல்லாம் ஜெயலலிதா சொன்னதால்தான் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர். எனவே, இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு யார் காரணம் ஜெயலலிதாவா, நானா?
இறுதி யுத்தத்தின்போது நான் ஒன்றும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக மனித சங்கிலி நடத்தினோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். சென்னையில் பேரணி நடத்தினோம். பந்த் நடத்தினோம். இதற்கெல்லாம் மேலாக 27.4.2009-அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பொய்யான தகவலைக் கூறி நான் கைவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், நான் உண்ணாவிரதம் இருந்த 27-4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், "போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.''
"போர் முனையிலிருந்து வெளி வந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்குக்கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்'' என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாக பிரணாப், அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்குத்தான் களங்கம் கற்பிக்க முயலுகிறார் இன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா. இந்த ஒன்றிலிருந்தே ஜெயலலிதாவின் தற்போதைய செயற்குழுத் தீர்மானம் எவ்வளவு இட்டுக் கட்டிய கற்பனை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தங்கள் வரலாற்றை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு பிறர் மீது மாசு கற்பிக்க முயலுவதும், மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்பிய கதையாகவே ஆகிவிடும்" என்று கூறியுள்ளார்.