Published:Updated:

அரசு குழந்தைகள் காப்பகங்களுக்கு சலவை இயந்திரங்கள் வழங்க ஜெ. உத்தரவு!

அரசு குழந்தைகள் காப்பகங்களுக்கு சலவை இயந்திரங்கள் வழங்க ஜெ. உத்தரவு!
அரசு குழந்தைகள் காப்பகங்களுக்கு சலவை இயந்திரங்கள் வழங்க ஜெ. உத்தரவு!
அரசு குழந்தைகள் காப்பகங்களுக்கு சலவை இயந்திரங்கள் வழங்க ஜெ. உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 27 அரசு குழந்தைகள்  காப்பகங்கள் மற்றும்
7 அரசு சேவை  இல்லங்களுக்கு சலவை இயந்திரங்களை வாங்கி வழங்க   தலா 3  லட்சத்து 1 கோடியே 20  லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சமூக நல  இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 27 அரசு குழந்தை காப்பகங்கள் மற்றும்  7 சேவை இல்லங்கள் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உணவு, உறைவிடம், சீருடைகள் மற்றும் கல்வி  வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகள் தங்கள் துணிகளை தாங்களே  துவைத்துக் கொள்வதால், அவர்கள் பயிலும் நேரம் வீணாகிறது.

எனவே, இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் பணிச் சுமையினை  குறைக்கும் வகையிலும், துணி துவைக்கும் நேரத்தினை கல்விக்காகவும்,  ஒய்விற்காகவும்  செலவிட ஏதுவாகவும்,  தமிழ்நாட்டில் உள்ள 27 அரசு குழந்தைகள்காப்பகங்கள் மற்றும் 7 அரசு சேவை இல்லங்களுக்கும் தொழிற்சாலைகள்  மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடிய  தரம் வாய்ந்த 34 சலவை  இயந்திரங்களை தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வாங்கி வழங்க தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இதற்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர்  ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம், அரசு காப்பகங்களில் உள்ள குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு  நேரங்களில், தங்களது கல்வியில் தனிக்கவனம் செலுத்தி நன்முறையில் தேர்ச்சி பெற  வழிவகை ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.