கழுகார் வரும்போது லே அவுட் ஆகிக்கொண்டிருந்த மின் கட்டண உயர்வு கட்டுரையை வாங்கிப் படித்துவிட்டு நம் பக்கமாக நகர்ந்து வந்தார்!

''தலைமைச் செயலகத்தில் வலம் வந்தபோது அதிகாரி ஒருவர், 'எல்லா பாவமும் பன்னீருக்கு போகட்டும் என்று நினைத்துவிட்டார்கள்போல!’ என்று சொல்லிச் சிரித்தார்!' என்றபடி ஆரம்பித்தார்.

''ஏன் அப்படிச் சொன்னார்?'

''செப்டம்பர் 29-ம் தேதி தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். முதல்வர் ஆனபிறகு ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்கு உயர்த்தி உத்தரவிட்டார். 'மனிதனுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களில் முக்கியமானதாகக் கருதப்படுவதும் கிராமப்புற விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமான பாலினை உற்பத்தி செய்வோருக்கு ஆதாய விலை கிடைக்கச் செய்தல், மக்கள் சேவையினை திறம்பட செய்து கொண்டிருக்கும் ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோருக்குத் தரமான பால் தங்குத் தடையின்றி நியாயமான விலையில் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயலாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு’ என்று பன்னீர் நீட்டி முழக்கினாலும், ஒவ்வொரு குடும்பத்தினரும் பாலுக்குக் கூடுதலாக எவ்வளவு தர வேண்டி இருந்தது என்பதை நினைத்து பதறித்தான் போனார்கள். 'பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 23 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதாவது, லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தவும் எருமை பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 31 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக அதாவது, 4 ரூபாய் உயர்த்தவும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது’ என்று பெருமையோடு அறிவித்தார் முதல்வர் பன்னீர்.

ஆனால் 'பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பதப்படுத்தும் செலவுகளை ஈடுசெய்ய, சமன்படுத்திய பால் அட்டை விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 24 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது’ என்று மட்டுமே சொன்னார். அதாவது கொள்முதல் விலையை உயர்த்தும்போது ஜெயலலிதா பெயரைச் சொன்னார். பால் விற்பனை விலையை உயர்த்தும்போது மறந்தும் ஜெயலலிதா பெயரை உச்சரிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதாவது அ.தி.மு.க அரசு பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை ஒரு லிட்டர் பால் 16 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிகப்படியாக ஒரு லிட்டர் பால் ஒரேயடியாக 10 ரூபாய் கூட்டியதும் பன்னீர் காலத்தில்தான்!'

''ஓஹோ! அதனால்தான், 'எல்லா பாவமும் பன்னீருக்கே’ என்று அவர் சொன்னாரா?'

''பாலைப் போலத்தான் மின் கட்டணமும் உயர்ந்துவிட்டது. 15 சதவிகிதம் கட்டணம் கூடிவிட்டது. அதுவும் பன்னீருக்கான கெட்ட பெயராகவே மாறிவிட்டது. இத்துடன் ஒப்பிடக் கூடாது என்றாலும் பெரும் குடிமகன்களின் பிரச்னையான டாஸ்மாக் சரக்குகளின் விலையும் 1.11.14 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் உள்பட அனைத்து சரக்குகளின் விலையும் 8 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இனி, ஜனவரி மாதத்தில் இருந்து ஆண்டுக்கு நான்கு தடவை டாஸ்மாக் மது விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதை கண்டித்து டிசம்பர் 17-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு இயக்கம் முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் தமிழக முதல்வர் எடுத்துள்ள முடிவுகள். 'மக்கள் முதல்வருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று அதிகாரிகள் சிலரே சொல்லிச் சிரிக்கிறார்கள்!'

''ம்!'

''மின் கட்டண உயர்வு வந்த அன்று அமைச்சர்கள் சிலரை தோட்டத்துக்கு அழைத்து ஜெயலலிதா கண்டித்ததாகச் சொல்கிறார்கள்.!'

''யார் யாராம் அவர்கள்?'

''அமைச்சர்கள் சண்முகநாதன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி, பூனாட்சி, காமராஜ் ஆகியோர் இதில் அடக்கம் என்கிறார்கள். இவர்கள் மீதான புகார்கள் பற்றி உமது நிருபர்களே வளைத்து வளைத்து எழுதி வருகிறார்களே! சண்முகநாதன், ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் 'வேறு’ மாதிரியான புகார்கள். வளர்மதி, காமராஜ் மீது துறை ரீதியான சந்தேக ரேகைகள். இப்படி பல்வேறு காரணங்கள் வெளியில் வந்துவிட்டன. இதையெல்லாம் நேரடியாகவே கேட்டு விளாசிவிட்டாராம் ஜெயலலிதா!'' என்ற கழுகாரிடம், ''தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலைப் பற்றிய ஃபாலோ அப் தகவல்களைத் தாரும்!' என்று கேட்டோம்.

''மாவட்டச் செயலாளர் தேர்தலில் முக்கியத் தலைகள் பலரும் போட்டியின்றி தேர்வாகி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, சக்ரபாணி ஆகியோருக்கும் விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விழுப்புரம் பொன்முடி, திருவண்ணாமலை எ.வ.வேலு, கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஸ்டாலினுக்கு அதி நெருக்கமானவர்களுக்கு எதிராக பலமான போட்டி இல்லை. மேலும், இன்னாரை ஜெயிக்க வையுங்கள் என்று தலைமைக் கழகத்தில் இருந்தும் தகவல்கள் தரப்படுகிறதாம்!'

''அப்படியா?'

''தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு போட்டி. முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக டி.ஆர்.பாலு ஆதரவுடன் துரை சந்திரசேகரன் போட்டியிட்டார். தலைமைக் கழகத்தில் இருந்தே துரை சந்திரசேகரனுக்கு வாக்களித்து வெற்றிபெற வையுங்கள் என்று தகவல் வந்ததாம். இப்படியும் பல மாவட்டங்களில் நடக்கிறது. விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கு பொன்முடியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அங்கு சிக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஷ்பராஜ் என்பவரை கடந்த 4-ம் தேதி திடீரென்று கட்சியை விட்டு நீக்கினார்கள். பிறகு 13-ம் தேதி சேர்த்துவிட்டார்கள். 'புஷ்பராஜை தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க நடத்திய தந்திரம்’ என்று இதனைச் சொல்கிறார்கள். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக ஆக நினைத்தார் மஸ்தான். செஞ்சி ராமச்சந்திரன் தலைமையில் பெருங்கூட்டமே ம.தி.மு.கவுக்கு போனபோதும் கட்சி மாறாதவர் மஸ்தான். அவர் பொன்முடியைச் சந்தித்து, 'சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் இங்கு சட்டமன்றத் தேர்தலில் நிற்க முடியாது. எனவே கட்சியிலாவது மாவட்டச் செயலாளர் ஆக்குங்கள்’ என்று கேட்டாராம். ஆனால், கண்ணன் ஆனந்த் என்பவருக்கு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டாராம் பொன்முடி. அவரை எதிர்த்து சேதுநாதன், திண்டிவனம் டாக்டர் சேகர், அசோகன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள். 'விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உதயசூரியன், மூக்கப்பன், ஆதிசங்கர், அங்கயற்கண்ணி, உளுந்தூர்பேட்டை விஜயகுமார், திருநாவலூர் வசந்தவேலு என்று பலரும் போட்டியிட 2006-ல் தி.மு.கவுக்கு வந்து கட்சி வேட்பாளருக்கு எதிராக தனது உறவினரை நிறுத்தியதாகக் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட வசந்தம் கார்த்தி என்பவரை பொன்முடி ஆதரிக்கிறார்’ என்று சொல்கிறார்கள்!''

''அப்படியா?'

''கடலூர் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிவிட்டார். மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.பி கணேசனை ஆக்கிவிட்டார். 'மொத்தமுள்ள 63-ல் 58 வாக்குகளை கணேசனுக்கு போடச் சொல்லி தலித் ஒருவர் மாவட்டச் செயலாளராக வர அனைவர் ஆதரவையும் குவித்துவிட்டார் பன்னீர்’ என்கிறார்கள் அந்த மாவட்டத்தில்!'

''ஓஹோ!'

''முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா, சென்னைக்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்தார். ஸ்டாலினைச் சந்தித்தார். தனக்கு சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். 'மாவட்டச் செயலாளர் பதவி உங்களுக்குத் தருவதாகவே முடிவெடுக்கவில்லை. அதற்குள் என்ன மாவட்டம் வேண்டும் என்று நீங்கள் எப்படிக் கேட்கலாம்?’ என்றாராம் ஸ்டாலின். நொந்துபோய் ஊருக்குப் போனார் ராஜா. அவரை முன்னாள் அமைச்சர் நேரு போனில் அழைத்து சமாதானம் செய்துள்ளார். சமாதானம் ஆகாத ராஜா, 'எனக்கு மாநகர், மாவட்டம் தருவதாக இருந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் யாரும் பேச வேண்டாம்’ என்றாராம். அதன் பிறகு நேரு, தற்போதைய சேலம் மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு போன் செய்தாராம். 'இனி ராஜாவுக்காகப் பரிந்து பேசிக்கொண்டு தலைமைக்கு யாரும் வர வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பது தலைமைக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டாராம். இத்துடன் விவகாரம் முடியவில்லை!'

''என்ன நடந்தது?'

''சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ளது மாவட்ட தி.மு.க அலுவலகமான 'கலைஞர் மாளிகை.’ இதனுடைய இரண்டாவது மாடியில்தான் மாவட்ட அலுவலகம் இருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் கட்டிய மாளிகை இது. பொதுப் பாதையில் அனைவரும் வரலாம். வி.ஐ.பிக்களுக்காக லிஃப்ட் இருக்கும் இடம்வரை காரில் செல்ல வசதியாக வேறு ஒரு பாதை அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பாதையை திடீரென்று சுவர் எழுப்பி தடுத்துவிட்டார்கள். 'இது பொது வழி அல்ல’ என்றும் போர்டு வைத்துள்ளார்கள். 'இது ராஜாவின் வேலைதான். இந்தப் பாதையை வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு ராஜா மட்டும்தான் அதிகம் பயன்படுத்தி வந்தார். தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத கோபத்தில் இப்படிச் செய்துவிட்டார்’ என்று சொல்கிறார்கள் ராஜாவின் எதிர்கோஷ்டியினர். 'பாதை அடைக்கப்பட்டதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!’ என்று சொல்லி வருகிறார் ராஜா. சேலத்தில் செம சீன் விரைவில் அரங்கேறலாம்! போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களை அவசரமாக சென்னைக்கு வரச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அங்கெல்லாம் என்ன பிரச்னையோ?' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

''காவிரி குறுக்கே அணைகட்டுதல், மீதேன் திட்டத்தை எதிர்த்தல், பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் விழிப்பு உணர்வு பிரசாரப் பயணத்தைத் தொடங்கி வைத்து கிராம கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருகிறார் வைகோ. கடந்த 12ம் தேதி தஞ்சை மாவட்டம், களிமேட்டில் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பயணத்தில் பேசிய வைகோ, 'விவசாய நிலங்களை அழிக்கின்ற மீத்தேன் திட்டத்தை ஈஸ்ட்ரன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தது, அதன் உரிமையாளர் பெயர் பிரசாந்த் மோடி. அவர் நரேந்திர மோடிக்கு வேண்டியவர் என்று அறிகிறேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைவிட ஆயிரம் மடங்கு ஆபத்து மீத்தேன் எடுக்கும் திட்டம். இந்தத் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம்’ என்று சொன்னார். இந்தத் தகவல் பரவியதும் தஞ்சையில் உள்ள அந்த கம்பெனியின் திட்ட அலுவலகம் உடனடியாகப் பூட்டப்பட்டுவிட்டது!' என்றபடி பறந்தார்!

அட்டை படம்: சொ.பாலசுப்ரமணியன்

படம்: வீ.சக்திஅருணகிரி

வாட்ஸ் அப் மிரட்டல்!

நாகப்பட்டினம் மணல்மேடு பேரூராட்சி துணைத் தலைவர் மதனை செல்போனில் மிரட்டும் ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. உட்கட்சித் தேர்தல் தொடர்பாக மதனை, 'துணைத் தலைவர் பதவியில் இருந்து காலி பண்ணி உன்னை உள்ளே வெச்சிடுவேன். எல்லா இடத்திலும் ஆள் போட்டிருக்கேன். ஒழுங்கா இரு’ என மிரட்டுகிறது அந்தக் குரல். இது அமைச்சர் ஜெயபாலின் குரல் என்பது மதனின் குற்றச்சாட்டு. இந்த ஆடியோவை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மதன்.

மூன்று மணிநேரத்தில் வந்த மிரட்டல் மெயில்!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் ஆள் சேர்த்ததாகவும், அந்த அமைப்புக்கு ஆதரவான தகவல்களை மொழி மாற்றம் செய்து தகவல்களைப் பரப்பியதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த மெஹ்தி என்ற 24 வயதுடைய இன்ஜினீயரை தேசிய புலனாய்வுத் துறை மூலம் பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

''இவருடைய முழுப்பெயர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ். இவர் மேற்குவங்கத்தில் உள்ள கோபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் இயக்கி வந்த ட்விட்டர் பக்கத்தில் சொந்த ஊர் மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத் என்ற கிராமம் கிடையாது. இவர் பெங்களூருவில் 2012-ம் ஆண்டு முதல் ஐ.டி.சி ஃபுட்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பகல் நேரத்தில் இந்தப் பணியை முடித்த பிறகு இரவு நேரங்களில் தன்னுடைய லேப்டாப் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படித்து தெரிந்துகொள்வதோடு, அரபு மொழியும் ஆங்கிலமும் தெரிந்திருந்ததால் அந்தச் செய்திகளை ஆங்கில மொழிக்கு மாற்றி பதிவேற்றம் செய்திருக்கிறார்' என்கிறது போலீஸ்.

மெஹ்தியை கைது செய்த 3 மணி நேரத்துக்குள் பெங்களூரு குற்றவியல் துணை ஆணையர் அபிஷேக் கோயல் ட்விட்டர் பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இருந்து, 'எங்கள் சகோதரர்களை உங்களிடம் விட்டு வைக்க மாட்டோம். விரைவில் பழி வாங்குவோம். எங்கள் பதிலடிக்காகக் காத்திருங்கள்’ என்ற மிரட்டல் பதிவு வந்திருக்கிறதாம்!

இதில் தவறு இல்லை!

மக்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி அவை நடவடிக்கை தொடர்பாக ஒரு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். அதில் தி.மு.க சார்பில் பங்கேற்ற கனிமொழி தர்மபுரி மருத்துவமனையில் பிஞ்சுக் குழந்தைகள் பலியான விவகாரத்தை அவையில் எழுப்புவது பற்றி சொல்லியிருக்கிறார். உடனே அங்கிருந்த நவநீதகிருஷ்ணன், ''மாநில விவகாரத்தை எல்லாம் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியாது. இதை நீங்கள் ஏற்கக்கூடாது'' எனச் சொன்னார். ''இது போன்ற மாநில பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதில் தவறு இல்லை'' எனச் சொல்லியிருக்கிறார் அன்சாரி. உடனே கோபம் அடைந்த நவநீதகிருஷ்ணன், ''இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது'' என கோபத்தோடு கர்ஜித்திருக்கிறார். உடனே அன்சாரி, ''நீங்கள் அவைக்கு புது உறுப்பினர். இப்போதுதான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். அவையின் மரபுகள், விதிகள் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. அவை நடவடிக்கை விதிகளை படித்துவிட்டு வாருங்கள்'' எனச் சொல்லி அவர் வாயை அடைத்திருக்கிறார். அதன் பிறகு கனிமொழி அவையில் தர்மபுரி விவகாரத்தைத் தொட்டார்.

பாம் ஸ்குவார்டு பரிதாபம்!

வி.வி.ஐ.பிகள் பாதுகாப்புக்காக, வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கவும் செயலிழக்கவும் பாம்ஸ்குவார்டு பிரிவு தமிழக போலீஸில் 1991-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் நன்கு தேறிய ஓய்வுபெற்ற ராணுவத்தினர்தான் பல நிலைகளில் வேலை செய்கிறார்கள். தொகுப்பூதியம் அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். 2007-ம் ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி நிரந்தரம் முறையாக நடந்து வந்தது. 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் 6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில்தான் பணியாற்றி வருகின்றனர். 17 பேர் பணி நிரந்தரத்துக்கான ஃபைல்கள் பல மாதங்களாகப் பரிதாபமாக உள்துறை செயலாளர் அலுவலகத்தில் காத்துக்கிடக்கிறதாம். ஆபத்தை தடுக்கிறவர்களுக்கு வந்த ஆபத்தை காப்பற்றுங்கள்!