ஹெச்.ரஹீம், மதுரை.

டிசம்பர் 11-ம் தேதி பிறந்தவரின் பிறந்தநாளை அவ்வளவாக யாரும் தமிழ்நாட்டில் கொண்டாடுவதில்லையே ஏன்?

பாரதி என்ன சினிமாவில் நடித்தாரா? அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டுப் போனாரா? குறிப்பிட்ட சாதிக்காவது தலைவராக இருந்தாரா? எதுவும் இல்லையே, யார் கொண்டாடுவார் அவரது பிறந்தநாளை? இவர்கள் கொண்டாடாமல் இருப்பதே பாரதிக்கு மரியாதை!

நா.போத்திராசு, பள்ளிக்கரணை.

இலங்கைத் தமிழர் பிரச்னையும் மீனவர் பிரச்னையும் ஒன்றா?

இல்லை. முதலாவது இலங்கையின் பிரச்னை. இரண்டாவது இந்தியாவின் பிரச்னை.

இலங்கையைப் பூர்வீகத் தாயகமாகக் கொண்ட இனச்சிறுபான்மையினரான தமிழர்கள் தங்களது அரசியல், பொருளாதார, வாழ்வியல் உரிமைக்காகப் போராடுவது இலங்கைத் தமிழர் பிரச்னை. ஆனால் மீனவர் பிரச்னை என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னை அல்ல. இந்தியாவை வாழ்விடமாகவும் குடியுரிமையும் பெற்ற இந்திய மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை மீறி வந்துவிட்டதாகச் சொல்லி கைது செய்து, கொழும்பு சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்வது. சிங்கள கடற்படை இவர்களைக் கைது செய்கிறது. இலங்கைக் கடல் எல்லையை அந்த நாட்டு கடற்படை காவல் காப்பதுபோல, இந்திய எல்லையை இந்தியக் கடற்படை காவல் காக்கிறது. எல்லை தாண்டி நம்முடைய மீனவர்கள் செல்லாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்தியக் கடற்படை செய்யுமானால் இந்த சிக்கலே வராது அல்லவா?

சிவபாக்யா கண்மணியப்பா, கருப்பம்புலம்.

முல்லை பெரியாறு தொடர்பான கேரள அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டதே?

இது எதிர்பார்த்ததுதான். முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கிறது என்று நிபுணர் குழுவும் அதனால் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் சொன்ன பிறகும் கேரள அரசியல்வாதிகள் அணையைப் பற்றிய அச்சுறுத்தலைச் செய்து வருவதே அரசியல்தானே தவிர, கேரள மக்கள் மீதான அக்கறை அல்ல.

நிபுணர் குழு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மன்றத்தில் வைத்து, கேரள மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய பொறுப்பு கேரள அரசுக்கும் அந்த மாநில அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. அதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வது தவறானது. தமிழக அரசுடன் பேசி முல்லை பெரியாறு அணையின் பயன்பாட்டை இரண்டு மாநில மக்களும் பயனுற எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தன்மையில் கேரள அரசு தனது சிந்தனையைத் திருப்ப வேண்டும்!

ஆனால், கேரளா இப்படியெல்லாம் நல்வழியில் நடைபோடுவதாகத் தெரியவில்லை. இப்போதுகூட, முல்லை பெரியாறில் புதிதாக ஓர் அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்றுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயல் என்பது தெரியாமல், மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்துள்ளது. அணை பலமாக இருக்கிறது என்பதை ஆய்வுக்குழு அமைத்து உறுதி செய்துவிட்ட உச்ச நீதிமன்றம், பழையபடி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யலாம் என்று தீர்ப்பு எழுதிவிட்டது. இதன்படி, 136 அடியிலிருந்து, 142 அடியாக நீர்மட்டம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அணைக்கான ஆய்வுப்பணிகளுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்த விஷயத்தில் தமிழகம் மற்றும் கேரளா இடையே புகைச்சல் தொடரவேண்டும் என்பதை மோடி அரசும் விரும்புகிறதோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.

திறமை இல்லாதவர்கள்கூட அரசியலில் புகுந்ததும் நிறைய சம்பாதித்து விடுகின்றனரே?

நீங்கள் 'திறமை’ என்று எதனை நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சம்பாதிப்பதில் அதிக திறமைசாலிகளாக இருக்கலாம் அல்லவா?!

இரா.நெல்லை அறிவரசு, ஆவடி.

கருணாநிதியும் விஜயகாந்த்தும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுச் சென்றுவிடுவது சரியா?

சரியல்ல. கருணாநிதியாவது தனது உடல்நலனைக் காரணமாகச் சொல்லிக் கொள்ளலாம். வீல் சேரில் வரும் கருணாநிதியால் அவரது இருக்கை வரைக்கும் அதில் போக முடியாது. வீல் சேரில் இருந்து சட்டசபை இருக்கையில் மாறி உட்காருவதும் சிரமம். அதனால் அவர் கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விஜயகாந்துக்கு என்ன வந்தது? அதைவிட அவருக்கு வேறு என்ன வேலை?

அ.யாழினி பர்வதம், சென்னை - 78.

வாஜ்பாய் அரசுக்கும் மோடி அரசுக்கும் என்ன வித்தியாசம்?

எப்போதும் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடனும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை செய்துதான் வாஜ்பாய் முடிவுகள் எடுப்பார். இப்போது பல்வேறு அமைச்சரகங்களில்கூட பிரதமர் அலுவலகமே அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்து விடுகிறது என்பது டெல்லி தகவல்!

குலசை ஆதிநாராயணன், தூத்துக்குடி.

பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார்களே?

அது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் தனிப்பட்ட கருத்து. எந்த தனிப்பட்ட மதத்தின் நூலும் ஒட்டுமொத்த இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்படாமல் இருப்பதே நல்லது!

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தும் ஆர்.எம்.வீரப்பனால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லையே ஏன்?

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தது தொடங்கி அவர் மறைவு வரைக்கும் ஆர்.எம்.வீரப்பன் அரசியலின் உச்சத்தில்தான் இருந்தார். அடுத்து ஜானகி எம்.ஜி.ஆரை முதல்வராக்கியதும் ஆர்.எம்.வீதான். அன்றைக்கு தி.மு.கவின் ஆதரவை வாங்க ஆர்.எம்.வீ எடுத்த முயற்சிக்கு கருணாநிதி கை கொடுத்திருந்தால் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலமே கணிக்க முடியாததாக ஆகியிருக்கும். அடுத்து ஜெயலலிதா அமைச்சரவையில் ஆர்.எம்.வீ சேர்ந்ததும், அங்கிருந்து விலகி, கருணாநிதியுடன் கைகோத்ததும் அவருக்கு பெருமை சேர்க்கவில்லை!

எஸ்.அசோக், கோவை - 27.

சுப்பிரமணியன் சுவாமியால் தமிழக பி.ஜே.பிக்கு பலமா... பலவீனமா?

சுவாமியால் ம.தி.மு.க அந்தக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. பா.ம.கவுக்கு எதிராக தனது வலைப்பக்கத்தில் சுவாமி எழுத ஆரம்பித்துள்ளார். அவர்களும் மிரள ஆரம்பித்துள்ளார்கள். 'சினிமாக்காரர்களை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்பது சுவாமியின் நீண்ட நாள் எண்ணம். அடுத்ததாக விஜயகாந்த்தையும் குறி வைக்கலாம். இதெல்லாம் பி.ஜே.பியை பலப்படுத்தும் காரியம்தான் என்று அந்தக் கட்சிக்காரர்கள் நினைத்தால் பலப்படுத்தும் காரியம்தான்!

ப.க.சபாபதி, அருவங்காடு.

ஜி.கே.வாசனின் த.மா.கா கட்சிக் கொடியில் மூப்பனாரின் படம் இடம் பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

காமராஜரின் படத்துடன் நிறுத்தி இருக்கலாம். அதற்காக மூப்பனார் படத்தை போட்டிருப்பதிலும் தவறில்லை. 'தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது’ என்பதுதான் காமராஜரின் இறுதி மரண சாசனம். அதனை இரண்டு முறை பரிசீலனை செய்து பார்த்தவர் மூப்பனார். 1989 சட்டமன்றத் தேர்தலிலும் 1999 நாடாளுமன்றத் தேர்தலிலும் மூப்பனார் இந்த முடிவை எடுத்தார். அது அவருக்குக் கை கொடுக்கவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இரண்டு கட்சிகளும் இல்லாத கூட்டணியை உருவாக்க நினைத்த அவரது பரிசோதனை முயற்சி தைரியமானது. அந்த அடிப்படையில் மூப்பனாரின் படத்தை ஜி.கே.வாசன் அச்சிட்டிருந்தால் வரவேற்கலாம். அப்பா என்பதற்காக மட்டும் என்றால் அது தப்பு!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!