''பாரதியின் இறப்பைக் கேள்விப்பட்ட காந்திக்கு ஆங்கிலத்தில் அஞ்சலி அறிக்கை எழுதிக்கொடுத்தார்கள். அதனைப் பார்த்து, 'ஆங்கிலத்தில் இருந்தால் பாரதி கோபித்துக் கொள்வான். தமிழில் எழுதித் தாருங்கள்...’ என்று சொல்லி தன் கையாலேயே எழுதி அஞ்சலி வெளியிட்டார் காந்தி. அப்படி ஓர் உணர்ச்சிமிக்க கவிஞன் இன்னமும் இந்த உலகில் தோன்றவில்லை'' குரோம்பேட்டை புதுக்காலனியில் நடைபெற்ற பாரதியார் சிலை திறப்பு விழாவில் உருக்கமாகப் பேசினார் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார். கடந்த 11-ம் தேதி இந்த நிகழ்ச்சியை சமூக சேவையாளர் சந்தானம் ஏற்பாடு செய்திருந்தார். யாருக்கும் பயப்படாமல் தனது மனதில் பட்ட சமூகக் காரியங்களைத் துணிச்சலாகச் செய்யக்கூடியவராக இந்த வட்டாரத்தில் செயல்படுபவர் சந்தானம். அவரது முயற்சியால் இங்கு பாரதிக்கு சிலை அமைக்கப்பட்டது.

சிலையைத் திறந்து வைத்து பாரதி கிருஷ்ணகுமார் பேசும்போது, ''தான் எழுதியதுபோல் வாழ்ந்துகாட்டியவர்கள் இந்த உலகில் மிகவும் அரிது. அப்படி வாழ்ந்துகாட்டியவர் பாரதி. இன்று தலித் மக்களும் தானும் சமம் என்று சொல்பவர்கள் அவர்களின் வீட்டுக்குச் செல்ல விரும்புவார்களா? ஆனால், தன் வீட்டில் அவர்களை அனுமதித்தது மட்டுமில்லாது தானும் அவர்கள் வீட்டில் உணவருந்தச் செல்வார் பாரதி. அப்படி ஒருமுறை ஓர் அன்பர் வீட்டில் சென்று உணவருந்தும்போது, தன் மனைவி செல்லம்மாவை அழைத்து வரச் சொன்னார். ஆனால், அவரது மனைவி வேறு ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்க, 'செல்லம்மா திருந்த இன்னும் கொஞ்ச ஆண்டுகள் ஆகும்’ என்று சொன்னார். கடந்த காலம் வரை புகைப்படத்தில்கூட பெண்கள் கணவரின் பின்தான் நிற்க வேண்டும் என்ற விதியை மாற்றி, தன் மனைவியை அமரவைத்து, தான் பின்னால் நின்று, புகைப்படம் எடுத்து மாற்ற முனைந்தவர் அந்தக் கவிஞன்.

2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் தான் கற்றுக்கொண்ட மொழியை தன் இனத்துக்கோ, சமயத்துக்கோ பயன்படுத்திய அறிஞர்கள்தான் இருக்கிறார்கள். யாராவது சமூக விடுதலைக்கோ, பெண் விடுதலைக்கோ, தொழில்நுட்பத்துக்கோ பயன்படுத்தி இருக்கிறார்களா? அதில் முதன்மையானவன் பாரதி!' என்று முடித்தார்.

பாரதி கனவுகண்ட தேசத்தை உருவாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு!

மா.அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்