தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்க வருகிற 19-ம் தேதி தேர்தல். இதற்காக, பேனர்கள், போஸ்டர்கள் என்று அமர்க்களப்படுகிறது தலைமைச் செயலகம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம். ரெக்கார்ட் கிளர்க் முதல் கூடுதல் செயலாளர் பதவியில் உள்ள சுமார் 4 ஆயிரம் பேர் வாக்காளர்கள்.

நான்கு அணிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. தலைவர் பதவிக்கு டீம் அணி சார்பில் கணேசன் என்பவர் போட்டியிடுகிறார். தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் பீட்டர் அந்தோணிசாமி மீண்டும் வின்னர்ஸ் அணி சார்பில் நிற்கிறார். பில்லர்ஸ் அணி சார்பில் வெங்கடேச பிரசாத் போட்டியில் இருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் அணி சார்பில் மாசிலாமணி போட்டியிடுகிறார் டீம் அணி சார்பில் போட்டியிடும் கணேசன், ''தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகள், பணியாளர்களின் பிரதான பிரச்னைகளை முழுவதுமாக நிறைவேற்றித் தந்தார்களா? கடந்த காலத்தில், எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்காமல் சுய விளம்பரம், போலி செயல்பாடுகள், சக நிர்வாகிகளிடம் இணக்கமின்மை என்கிற நிலைதான் இருந்தது. அந்த நிலையை நாங்கள் ஜெயித்தால் மாற்றிக்காட்டுவோம். ஆறாவது ஊழியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியபோது அப்போதைய அரசுடன் சுமுகமாகப் பேசி நல்ல விஷயங்களைப் பெற்றுத் தந்தோம். கீழ்மட்ட பதவி உயர்வுகள், மேல்மட்ட அதிகாரிகளின் பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறை காட்டுவோம்' என்றார்.

ஃப்ரெண்ட்ஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் மாசிலாமணி, ''எனக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் நான்கு பேரிடம் பி.ஏவாகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. டீம் அணி சார்பில் போட்டியிடும் கணேசன்கூட, தி.மு.க ஆட்சியில் ஓர் அமைச்சரிடம் பி.ஏவாக வேலை பார்த்தவர். பில்லர்ஸ் அணியில் போட்டியிடும் வெங்கடேச பிரசாத், முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரது அலுவலகத்தில் வேலை பார்த்தவர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தலைமைச் செயலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பதவிகளின் பெயராலும் சிலர் பிரிந்துகிடக்கிறார்கள். இவர்களுக்கு மாறாக, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது எங்கள் ஃப்ரெண்ட்ஸ் அணி. எங்களின் பிரதான வாக்குறுதிகள்... ஆட்டோமெட்டிக் புரமோஷன், தலைமைச் செயலக ஊழியர்களுக்கென பிரத்யேகமாக வீட்டுமனைத் திட்டம் மற்றும் வாடகை குடியிருப்புத் திட்டம், பெண் பணியாளர்களுக்கென டைனிங் ஹால் கொண்டுவருவோம். விடுப்பு பயணச் சலுகையானது ஒரு பணியாளர் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்கப்படுகிறது. இதை மாற்றி பணியில் சேர்ந்த ஒரே வருட இறுதியில் வாங்கித் தருவோம்' என்றார்.

தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் பீட்டர் அந்தோணிசாமி, மீண்டும் வின்னர்ஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். ''வீட்டுமனைத் திட்டம் 30 ஏக்கரில் 1,000 பணியாளர்களுக்கு (லிஃப்ட் ஆபரேட்டர் முதல் கூடுதல் செயலாளர் வரை) வழங்க எங்கள் முயற்சியால் அரசுத் தரப்பில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. நிதித்துறையில் இளையவர்களுக்கு இணையாக ஓரலகுத் துறையில் மூத்தவர்களுக்கு பதவி உயர்வுகள் விஷயத்தில் பிரச்னை உள்ளது. அதை விரைவில் தீர்ப்பேன். பதவி உயர்வுகளை வாங்கித் தந்திருக்கிறோம். தலைமைச் செயலகத்தில் மெடிக்கல் கேம்ப்பை பிரமாண்டமாக நடத்தினோம். எஸ்.ஓ, அண்டர் செகரட்டரி, டெபுடி செகரட்டரி எல்லோருக்கும் ஒரே சம்பள விகிதம் இருக்கிறது. அதை மாற்றி அமைக்கவேண்டும். ஏ.எஸ்.ஓகளுக்கு மத்திய அரசு வழங்குவதுபோல் ஊதிய விகிதத்தைப் பெற்றுத் தருவதில் அரசுக்குப் பாலமாக செயல்படுவோம்' என்றார்.

பில்லர்ஸ் அணியின் சார்பில் போட்டியிடும் வெங்கடேச பிரசாத், ''தற்போதுள்ள நிர்வாகிகளில் தலைவர் தவிர, மற்ற முக்கியமான மூன்று பதவிகளில் எங்கள் தரப்பினர் இருக்கின்றனர். இந்த முறை மீண்டும் நாங்கள் களத்தில் நிற்கிறோம். அரசிடம் வைக்கப்பட்ட 60 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றி தந்திருக்கிறோம். பொதுவான அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் இணக்கமாகப் பேசி பெற்றுத் தருவோம். நாமக்கல் கவிஞர் மாளிகை 28 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டதல்லவா? அது எங்கள் முயற்சியால் நடந்ததுதான். வீட்டுக் கடன் உதவியை ரூபாய் ஐந்து லட்சத்தில் இருந்து பன்னிரெண்டரை லட்சமாக உயர்த்தி வாங்கித்தந்தோம். மிகப்பிரமாண்டமாக மருத்துவ முகாமை தலைமைச் செயலகப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்தோம். செயலக பணியாளர்களுக்கு செஸ் போட்டி நடத்தி ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கினோம். பண்டிகை அட்வான்ஸ் ரூ.2 ஆயிரம் என்பதை ரூ.5 ஆயிரம் என்று உயர்த்தி வாங்கித் தந்தோம். 25 வருடகாலம் எந்தக் குறையும் இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.500 வெகுமதியை ரூ.2,000 ஆக உயர்த்தி பெற்றுத் தந்தோம். எங்கள் பணியாளர்களுக்குப் பணிச் சுமை இருக்கிறது. அதைப் போக்க, பணியாளர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டியிருக்கிறது. மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையான சம்பள விகிதத்தை எல்லா பதவியில் உள்ளவர்களுக்கும் பெற்றுத்தர வேண்டியிருக்கிறது. குறிப்பாக வீட்டுமனைத் திட்டத்தைப் பெற்றுத் தருவோம்'' என்றார்.

தலைமைச் செயலகத்தில் நடக்கும் தேர்தல் ஆயிற்றே... சும்மாவா?

ஆர்.பி.

படங்கள்: ஆ.முத்துக்குமார்