Published:Updated:

சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. க்கு பதிலளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!

சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. க்கு பதிலளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!
சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. க்கு பதிலளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!
சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ. க்கு பதிலளிக்க ஜெ.வுக்கு அவகாசம்!

புதுடெல்லி:  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், சி.பி.ஐ. யின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் 4 வார காலம் அவகாசம் அளித்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 1991 – 96 காலக்கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் குறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகலா கிருஷ்ண குமார், சி.பி.ஐ. யின் கேள்விகளுக்கு பதில் அளிக்க 4 வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதனை ஏற்று 4 வார காலம் அவகாசம் அளித்து நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சலமேஸ்வரர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

##~~##
இதேபோல் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சில ஆவணங்கள் வேண்டும் என்று கேட்டு சசிகலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இந்த வழக்கை அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.