காஷ்மீர் எப்போதும் வன்முறைகளால் சூறையாடப்பட்ட ஒரு மாநிலம். இந்தியாவும் பாகிஸ்தானும் அடிக்கடி மோதிக்கொள்ளும் ஒரு களம். இந்தச் சூழ்நிலையில் அங்கு நடந்த தேர்தல் முடிவுகளை உலகமே உற்றுப் பார்த்தது.

66 சதவிகித ஓட்டுப்பதிவு அங்கு நடந்தது. இத்தனை நாள் ஒரு தேசியக் கட்சியாக இருந்து, தான் எட்ட முடியாத இலக்குகளை இந்தக் குறுகிய காலத்துக்குள் அடைந்துள்ளது பி.ஜே.பி. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி பி.ஜே.பிக்கு ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றி பெற்ற உற்சாகத்துடன் காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலைச் சந்தித்த பி.ஜே.பிக்கு அங்கும் வெற்றி முகம்.

மதவாதக் கட்சி என்று அழைக்கப்படும் பி.ஜே.பி காஷ்மீரில் எங்கும் வெற்றிபெற வாய்ப்பில்லை என மற்ற கட்சிக்காரர்கள் கூறிக்கொண்டிருந்தபோது, 25 இடங்களைக் கைப்பற்றிவிட்டனர். மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 44 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும் பெற்றுள்ளன. 12 இடங்களை மட்டுமே பெற்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ்.

காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, ''இங்குள்ள மக்கள் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளிக்கலாம். மீண்டும் இங்கு அமைதி நிலவும் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் மோடி. ''மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரவாதிகள் டூரிஸ்ட்கள்போல வந்து செல்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டினார் ராகுல். கடந்த ஆறு ஆண்டுகளாக இருந்துவந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டணி சில தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு இல்லாததால் உடைந்தது. அதனால், நான்கு முனைப்போட்டி நிலவியது.

இதுவரை இல்லாத அளவுக்கு பி.ஜே.பி அங்கு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2009 தேர்தலில் 11 இடங்களை மட்டுமே போராடி வென்ற இவர்கள் இந்த முறை அதிகப்படியான இடங்களைப் பெற்று இரண்டாம் இடம் பெற்று இருந்தாலும் தற்போதைய நிலைமைக்கு அங்கு அதிகமான வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சியாக பி.ஜே.பி மாறியிருக்கிறது. அப்படி பார்க்கையில் தாங்கள் நினைத்ததை வெகு சுலபத்தில் எட்டிவிட்டார்கள் என்றும் சொல்லலாம். முன்னாள் முதல்வரான ஒமர் அப்துல்லா பீர்வா, சோனவர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு பீர்வாவில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான். அவரது அமைச்சரவையில் இருந்த 15 அமைச்சர்களுமே தோல்வியைத் தழுவியுள்ளனர். இதில் கடந்த 35 ஆண்டுகளாக வெற்றி பெற்றுவந்த அப்துல் ஹரீம் ராதரும் தோல்வி அடைந்துள்ளார். காலம் காலமாகப் பெரும்பான்மையாக இருந்து வந்தவர்கள் மக்களிடம் நம்பிக்கை இழந்து உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. துணை முதல்வராக இருந்த தாரா சந்த் பி.ஜே.பியின் புதுமுக வேட்பாளரான கிருஷ்ணன் லாலிடம் சம்ப் தொகுதியில் தோற்றுள்ளார். ஒமர் அப்துல்லாவின் கோட்டையான நகரில் உள்ள எட்டு தொகுதிகளில் ஐந்தில் கோட்டைவிட்டுள்ளனர். இது அந்தக் கட்சியின் மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்களை யாராலும் புறக்கணிக்க முடியாது. இனிமேல் நடக்கவுள்ள அரசியல் நிகழ்வுகளில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். இருப்பினும் இந்தத் தேர்தலில் மோடி அலை அடித்துள்ளது உண்மைதான்'' என்று ஒப்புக்கொண்டுள்ளார் ஒமர் அப்துல்லா. காங்கிரஸோடு கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர்.

தொங்கு சட்டமன்றம்தான் அமைய வாய்ப்புள்ளது என்கிற நிலையில், முஸ்லிம் அல்லாத ஒருவரைத்தான் காஷ்மீரில் முதல்வராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அமித் ஷா. தேர்தல் முடிவுகள்குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ''எங்களிடம் மூன்று வாய்ப்புகள் உள்ளன. தானே ஆட்சி அமைப்பது, புதியதாக அமையும் அரசுக்கு ஆதரவு அளிப்பது, புதிய அரசில் பங்கு கொள்வது... இதில் எதைச் செயல்படுத்தலாம் என்று நாங்கள் பொறுத்திருந்து முடிவு எடுப்போம். ஆனால், இப்போது காஷ்மீரில் பி.ஜே.பிதான் 'கிங் மேக்கர்’ '' என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முக்தி கூறுகையில், ''திருடர்கள் மற்றும் வஞ்சகர்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகள், நலன்களைக் கருத்தில் கொண்டு பொறுத்திருந்து முடிவு எடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

அப்படி ஒமர் பி.ஜே.பியுடன் கூட்டணி சேர்ந்தாலும் இருவருக்கும் சேர்த்து 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மைக்கு 4 இடங்கள் தேவைப்படும் நிலையில், முன்னாள் பிரிவினைவாதக் கட்சித் தலைவர் சஜ்ஜத் லோனின் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் இரண்டு இடங்களும் சுயேச்சைகளின் 3 இடங்களும் தேவைப்படுகின்றன. ஆட்சியில் அமர்வதற்கான முயற்சியை பி.ஜே.பி தொடங்கிவிட்டது.

ஜம்மு காஷ்மீரில் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மா.அ.மோகன் பிரபாகரன்