நம் முன் ஆஜரான கழுகார் தனது சிறகுகளுக்குள் இருந்து அன்று வெளியான 'முரசொலி’ நாளிதழை எடுத்து விரித்தார்.

''பரபரப்பையும் பதற்றத்தையும் கிளப்பிய தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலின் முடிவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடத் தொடங்கிவிட்டது தி.மு.க தலைமை. இதில் பல அதிர்ச்சியான சமாச்சாரங்களும் ஆச்சர்யமான விஷயங்களும் உள்ளன'' என்ற பீடிகையுடன் தொடங்கினார்.

''தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்த பட்டியலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்தான் முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மாவட்டச் செயலாளராக சுரேஷ்ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். சுரேஷ்ராஜனை வீழ்த்துவதற்காக செந்தில் முருகன் என்பவர் கடுமையாக உழைத்தார். சென்னையில் வைத்துத்தான் தேர்தல் நடந்தது. இறுதியில் சுரேஷ்ராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதே தவிர, இந்த வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துவிட்டதாக செந்தில் முருகன் புலம்புகிறார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராகி இருக்கிறார் த.மனோ தங்கராஜ். அவரை வீழ்த்த சுரேஷ்ராஜன் கடுமையாக முயற்சித்தார். கருணாநிதிக்கே தவறான தகவல் தந்தார்கள். பின்னர் உண்மையைப் புரிந்துகொண்ட கருணாநிதி, கடந்த 19-ம் தேதி தனது பெயரில் அறிக்கையை வெளியிட்டார். மனோ தங்கராஜை மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிப்பதாக அறிவித்தார். இந்தத் தேர்தல் சம்பந்தமான அனைத்து அறிவிப்புகளும் இதுவரை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அன்பழகனே வெளியிட்டு வந்தார். ஆனால் கன்னியாகுமரியைப் பொறுத்தவரை கருணாநிதி பேரில் அறிக்கை வெளியானது. அந்தளவுக்கு கருணாநிதியைக் கோபம் ஆக்கியதாம் சுரேஷ்ராஜனின் நடவடிக்கைகள்.'

''ஸ்டாலின் ஆதரவு இருக்கிறது என்ற தைரியத்தில் ஆடியவர்களுக்கு விழுந்த அடியாக்கும்!'

''தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை என்.பெரியசாமியும் வடக்கு மாவட்டத்தை கே.ராஜாராமும் கைப்பற்றி உள்ளனர். இந்த ராஜாராமும் என்.பெரியசாமி ஆதரவாளர்தான். தன்னுடைய மகன் ஜெகனை மாவட்டச் செயலாளர் ஆக்க பெரியசாமி திட்டமிட்டார். ஆனால், அது அவரால் முடியவில்லை. திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இதுவரை இருந்த கருப்பசாமிப் பாண்டியன் இந்தத் தேர்தல் ஸீனில் இல்லை. தனது மகனை மாவட்டச் செயலாளர் ஆக்க முயற்சித்தார். அதுவும் நடக்கவில்லை. அவரது முக்கிய எதிரியான ஆவுடையப்பன், நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டார். ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், தலைமைச் செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். மேற்கு மாவட்டத்தில் ஜெயித்த துரைராஜ், கருப்பசாமி பாண்டியன் ஆதரவாளர். மத்திய மாவட்டத்துக்கு தன்னுடைய மகன் சங்கரை செயலாளர் ஆக்கலாம் என்று 'கானா’ நினைத்தார். ஆனால் அதற்கு மற்ற நிர்வாகிகள் ஆதரவு இல்லை. அதுவரை 'கானா’ ஆதரவாளராக இருந்த அப்துல் வகாப் என்பவருக்கு, தாமே மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டால் என்ன என்ற ஆசை துளிர்த்தது. களத்தில் குதித்தார். அவரை ஜெயிக்க வைத்துவிட்டார்கள். பாளையங்கோட்டை எம்.எல்.ஏவான மைதீன்கான் இதற்கு பின்னணியாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.'

''நீர் சொல்வதைப் பார்த்தால் 'கானா’வுக்குச் சரிவுதான்போல?'

''விருதுநகர் மாவட்டத்தை தங்கம் தென்னரசுவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் பகிர்ந்துகொண்டார்கள். தேனி மாவட்டச் செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணனைக் கொண்டுவர ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார். ஆனால் பழைய ஆளான மூக்கையாவே மீண்டும் வந்துவிட்டார். மூக்கையா அதிகமான வாக்குகளை வைத்திருந்தார். அவரால் அழைத்துச் செல்லப்பட்ட ஆட்களில் 12 பேர் அணி மாறியபிறகும் கூடுதல் வாக்குகள் வாங்கி வென்றுவிட்டார் மூக்கையா. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைத் தனது கோட்டையாக ஐ.பெரியசாமி மீண்டும் ஆக்கிக் கொண்டார். கிழக்கு மாவட்டத்தைத் தனது மகன் செந்தில்குமாருக்கும் மேற்கு மாவட்டத்தைத் தனது நண்பர் சக்ரபாணிக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டார். மதுரையைப் பற்றி உமது நிருபரே விளக்கமாக எழுதிவிட்டாரே!'

''ஆமாம்!'

''மதுரையைப் பொறுத்தவரை கோ.தளபதியிடம் இருந்து மாவட்டத்தை வாங்கிவிட ஜெயராமன் துடித்தார். இறுதியில் அவரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். எஸ்ஸார் கோபியை தேர்தலில் தலையிடவே கூடாது என்றும் ஸ்டாலின் சொல்லிவிட்டார். முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு ஆதரவு இல்லை. எனவே, ஸ்டாலின் கைகாட்டிய ஆட்கள் மதுரையின் எல்லைக்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களிலும் செயலாளர்கள் ஆகிவிட்டார்கள். திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் ஸ்டாலின் விசுவாசிகளான முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும் க.செல்வராஜுக்கும் போட்டி. சாமிநாதனுக்கு வாக்கு இல்லை. அதனால் அவர் தோற்றுவிட்டார். செல்வராஜ் ஜெயித்துவிட்டார். தர்மபுரி மாவட்டத்தில் தடங்கம் பெ.சுப்ரமணி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இன்பசேகரன்தான் அதிகப்படியான வாக்குகளை வைத்திருந்தார். அவரோடு சேர்த்து ஐந்து பேரை நீக்கிவிட்டதால் தடங்கம் சுப்ரமணி ஜெயித்துவிட்டார் என்கிறார்கள். கரூர் மாவட்டத்தைப் பிடிக்க முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, அவரது மகன் ஆகிய இருவரும் நினைத்தார்கள். ஆனால், தொழிலதிபர் கே.சி.பழனிச்சாமி ஆதரவு இருந்ததால் நன்னியூர் ராஜேந்திரன் ஜெயித்துவிட்டார். பெரம்பலூர், அரியலூர் இரண்டிலும் ஆ.ராசா ஆதரவாளர்கள் வென்றுவிட்டார்கள். நாகை வடக்கு மாவட்டச் செயலாளராக குத்தாலம் கல்யாணம் வென்றுவிட்டார். ஸ்டாலின் ஆதரவாளரான ஏ.கே.எஸ்.விஜயன் இவரை தோற்கடிக்க முயற்சித்து செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் முருகனை நிறுத்தினார். ஆனால் முருகன் தோற்றுப் போனார். நாகை தெற்குக்கு ஏ.கே.எஸ். விஜயன் நின்றார். அவருக்கும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. வேதாரண்யம் வேதரத்தினம் அதற்கான முயற்சிகள் எடுத்து திருமருகல் செல்வம் என்பவரை நிறுத்தினார். அவரை ஸ்டாலின் வாபஸ் வாங்கச் சொல்லி விட்டதால் விஜயன் ஜெயித்தார்.'

''அப்படியா?'

''தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக கல்யாணசுந்தரம் ஜெயித்துள்ளார். ஆனால் அங்கு திருவிடைமருதூர் ராமலிங்கத்தைத்தான் ஸ்டாலின் ஆதரித்ததாகச் சொல்கிறார்கள். தஞ்சை தெற்கு மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமாருக்கும் துரை சந்திரசேகரனுக்கும் கடுமையான மோதல். இருவருமே 32 வாக்குகள் வாங்கினார்களாம். இறுதியில் ராஜ்குமார் வாங்கியதில் இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள் என அறிவிக்கப்பட்டன. அதனால்தான் துரை சந்திரசேகரன் ஜெயிக்க முடிந்தது என்கிறார்கள். இவர் ஸ்டாலின் ஆதரவாளர். இந்த அடிப்படையில் பார்த்தால், ஸ்டாலினால் பலரும் புகுத்தப்பட்டு இருந்தாலும் ஸ்டாலின் விரும்பாத பலரும் மாவட்டச் செயலாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இன்னும் பல மாவட்டங்கள் அறிவிக்க வேண்டியது பாக்கி உள்ளது' என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு தாவினார்.

''கூடங்குளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலை தொடர்பான சர்ச்சைகளே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அணு சக்திக்கு எதிரான போராட்டக்குழு மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், வழக்கறிஞர் சுந்தரராஜன், முகிலன், ராசாராம் ஆகியோர் ஒரு குழுவாக சுப.உதயகுமாரன் தலைமையில் சென்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முறையிட முடிவு செய்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட பலரையும் சந்தித்து முடித்த அந்தக் குழுவினர், கடந்த 15-ம் தேதி, திங்கள்கிழமையன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்திக்க போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றனர்.''

''மக்கள் முதல்வர் பார்த்தாரா?''

'ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. அவரைச் சந்திக்காமல் நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம் என்று சுப.உதயகுமாரன் குழுவினர் சொல்ல, பதறிப்போன போயஸ் கார்டன் அதிகாரிகள், அதன் பிறகு மேலிடத்தில் பேசினார்கள். பின்னர் ஒருவழியாக ஜெயலலிதாவின் அரசியல் உதவியாளர் வினோத், போராட்டக் குழுவினரைச் சந்தித்து மனுவை வாங்கிக்கொண்டார். அதன் பிறகு, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க தலைமைச் செயலகம் சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள், அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் முதலமைச்சரை சந்திக்க முடியாது. உங்களிடம் அப்பாயின்ட்மென்ட் இருக்கிறதா? என்று கேட்டு குடைந்தெடுத்தனர்.’ கடிதம் கொடுத்து ஆறு மாதங்களாகிவிட்டன. இதற்கிடையே முதலமைச்சரின் தனி உதவியாளர் இன்னோஷன்ட் திவ்யாவை இரண்டு முறை சந்தித்துள்ளோம். முதலமைச்சரின் துணை உதவியாளர் ராமனையும் சந்தித்துள்ளோம். ஆனால், இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் இல்லை. எனவே, இன்று நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்து விட்டுத்தான் செல்வோம். இல்லை என்றால் எந்தத் தேதியில் முதலமைச்சரை சந்திக்கலாம் என்பதற்கு உத்தரவாதத்தையாவது பெற்றுக் கொண்டுதான் செல்வோம். அதுவரை இங்கிருந்து நகரமாட்டோம்’ என்று சொல்லி கோட்டை வாசலில் நின்றுகொண்டனர். இதையடுத்து கோட்டையின் பாதுகாப்பு அதிகாரிகள் பதறிவிட்டனர். அவர்கள் போராட்டக் குழுவை, எவ்வளோ சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால், அவர்கள் நகர்வதாக இல்லை. காலை பத்தரை மணியில் இருந்து, மாலை நான்கு மணி வரை நின்ற இடத்தைவிட்டு தண்ணீர், தேநீர் என எதற்கும் ஓர் அடிகூட நகரவில்லை. இதையடுத்து என்ன நடந்ததோ மாலை 4.15 மணிக்கு அதிகாரிகள் வந்தார்கள். 'முதலமைச்சரை நீங்கள் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது’ என்று தகவல் தரப்பட்டது!'

''பரவாயில்லையே!''

''20 நிமிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அவர்கள் பேசியுள்ளார்கள். புதிதாக அணு உலை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, சுப.உதயகுமாரன் உள்பட இடிந்தகரைப் பகுதி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை இன்னும் தமிழக அரசு வாபஸ் பெறவில்லை என்றும் பொறியாளர் சுந்தரராஜன் எடுத்துச் சொன்னார். 'நான் அம்மாவிடம் இது பற்றிப் பேசுகிறேன். அதிகாரிகளிடமும் பேசுகிறேன்’ என்று சொல்லி போராட்டக் குழுவினரை திருப்பி அனுப்பி உள்ளார் முதல்வர் பன்னீர்.''

''ஓஹோ!''

''தாது மணல் விவகாரத்தில் வைகுண்டராஜனுக்கு வராத பிரச்னைகளே இல்லை. சட்டத்தையும் விதிமுறைகளையும் மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள், அரசியல் இயக்கங்களின் ஓயாத போராட்டங்கள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், உள்ளூர் மக்களின் எதிர்ப்புகள், சக போட்டியாளர்கள் கிளப்பிய வில்லங்கங்கள் என பல பிரச்னைகள் வைகுண்டராஜனுக்கு எதிராகக் கடந்த காலங்களில் கிளம்பி உள்ளன. ஆனால், அவை எதற்கும் வைகுண்டராஜன் ஓடி ஒளிந்ததில்லை. சமாளித்து வந்தார். ஆனால், ஒரு நிலத்தை சில கோடிகள் கொடுத்து வாங்கிய விவகாரத்தில் தற்போது சி.பி.ஐயிடம் வசமாக மாட்டிக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பையாவுக்குச் சொந்தமான நிலத்தை வைகுண்டராஜன், சந்தை மதிப்பைவிட பல கோடிகள் கூடுதலாகக் கொடுத்து வாங்கியதுடன், அதற்கான தொகையை சுப்பையாவின் வங்கிக் கணக்கில் செலுத்தி இருந்தார். இந்த விவகாரத்தைக் கண்டுபிடித்த சி.பி.ஐ., சுப்பையாவுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தைத்தான் வைகுண்டராஜன் நிலம் வாங்கியதாகக் கணக்குக்காட்டி அவருக்கு சுற்றி வளைத்துக் கொடுத்துள்ளார் என்று குற்றம்சாட்டி, ஆதாரங்களை அடுக்கியது. அதன்பிறகுதான், இந்த விவகாரம் வில்லங்கமானது என்பது வைகுண்டராஜனுக்குப் புரிய வந்தது.

இதற்கிடையே, வைகுண்டராஜனை கைது செய்யவும் சி.பி.ஐ நடவடிக்கைகளைத் தொடங்கியது. அப்போது ஓடி ஒளிய ஆரம்பித்தவர் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்றங்களில் முன்ஜாமீன் கேட்டு வைகுண்டராஜன் போட்ட மனுக்களும் தள்ளுபடியான நிலையில், சி.பி.ஐ அவரைக் கைது செய்ய தீவிரமாகத் தேடி வருகிறது. மதுரையிலும் தூத்துக்குடியிலும் இரண்டு தனிப்படைகள் இதற்காக சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், வைகுண்டராஜனுக்கு சாலைவிபத்தில் படுகாயம் என்று சிலர் சொல்லி வருகிறார்கள். மருத்துவமனைகளில் தேடிக்கொண்டு இருக்கிறது சி.பி.ஐ'' என்றபடி பறந்தார் கழுகார்.

படம்: வி.செந்தில்குமார்

வாழ்த்து அனுப்பாதது ஏன்?

ஒரு மாநிலத்தின் முதல்வர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது தொன்றுதொட்டு நடக்கும் விஷயம். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துச் சொல்ல மனம் இல்லை. மக்கள் முதல்வர் போயஸ் கார்டனில் முடங்கிக் கிடக்கும்போது எப்படி வாழ்த்துச் சொல்லலாம் என தயங்கி சொல்லாமல் விட்டுவிட்டாராம். முதல்வர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்த்துச் செய்தியும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியும் வெளியிடப்பட்டால் முதல்வரின் வாழ்த்துச் செய்திதான் பத்திரிகைகளில் முதலில் இடம்பெறும். அதனால் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை. ஆனால் என்ன காரணத்திலோ ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்தியும் இடம்பெறவில்லை. சிறைக்கு போய்விட்டு வந்த பிறகு எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருக்கும் ஜெயலலிதா, பண்டிகைக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. இப்படித்தான் தீபாவளிக்கும் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவும் வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை. வாழ்த்துச் செய்தி இருக்கட்டும். கிறிஸ்துமஸ் விழா அ.தி.மு.க சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாப்படும். அதில் பேராயர்களுடன் ஜெயலலிதா கேக் வெட்டி மகிழ்வார். இந்த ஆண்டு அந்த வைபவம் மிஸ்ஸிங். ஜெயலலிதா சிறைக்கு போய்விட்டு வந்ததால், கிறிஸ்துமஸும் கொண்டாடப்படவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி கூடிய பொதுக்குழு இந்த ஆண்டு அதற்கு முன்பே கூட்டியிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. பொதுக்குழுவை தள்ளிபோடுவது என்றால் தேர்தல் கமிஷன் வரை பதில் சொல்லியாக வேண்டிய முக்கியமான விஷயம். ஆனால் அ.தி.மு.கவோ தலைவி சோகத்தில் இருப்பதால் எதைக் கண்டும் அஞ்சாமல் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நினைவு நாளில்கூட ஆப்சென்ட் போட்டுவிட்டு ஜெயலலிதா வீட்டிலேயே இருக்கிறார்.