நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மரணம் விடை தெரியாத சர்ச்சையாகவே தொடர்கிறது. நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக் கோரி ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி கலந்துகொண்டார். அவரை கொல்கத்தாவில் இருந்து அனுப்பி வைத்துள்ளார் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக மைக் பிடித்தார் வைகோ. ''நேதாஜி தொடர்பான சான்றுகளை வெளியிடக் கோரி தகவல் அறியும் சட்டத்தின்படி சுபாஷ் அகர்வால் என்பவர் மத்திய அரசைக் கேட்டபோது, நேதாஜி குறித்து 41 ஆவணங்கள் இருப்பதாகவும் அதில், முக்கியமான இரண்டு ஆவணங்கள் ரகசியங்கள் நிரம்பியவை என்றும், அவற்றை வெளியிட முடியாது என்றும் அந்த ரகசியத் தகவல்கள் வெளியே வந்தால், சில நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளைப் பற்றி யோசித்தவர்கள், இந்தியாவின் கோடானகோடி மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டு, வெளிநாடுகள் உறவை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டாடும் மத்திய அரசின் போக்குக் கண்டனத்துக்கு உரியது. ராஜபக்ஷே போன்ற கொலையாளிகளுக்கு மரியாதை தருபவர்கள், தன் தேச மக்களைத் தள்ளி வைப்பது ஏன்? இந்திய நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த மேதையான எச்.வி.காமத், 'நேதாஜி மரணம் குறித்து விசாரணை வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். 1956-ல் நேரு ஆட்சியின்போது ஷாநவாஸ் கான் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேதாஜி மறைந்ததாக அறிக்கை தந்தாலும், 1967-க்குப் பின், மேற்கு வங்க எம்.பி சமர் குகா, நேதாஜியின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். 350-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் ஆதரவு தந்தனர். 1970-ல், முன்னாள் நீதிபதி கோஷ்லா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை இந்திரா காந்தி அமைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேதாஜி இறந்ததாக அந்தக் குழு அறிவித்தது.

ஆனால் சத்யேந்திர நாராயணன் சின்கா, நேதாஜி குறித்த உண்மைகளை அறிய பல ஆண்டுகள் போராடி, நேதாஜி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் பகுதியும் அரசு வெளியிட்ட புகைப்படமும் ஒரே மாதிரியாக இல்லை என்ற கேள்வியை எழுப்பியதோடு, அந்த விமானம் டைரன் என்ற நகருக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்ததற்கான ஆதாரங்களையும் தெரிவித்தார். இறந்ததாக சொல்லப்பட்ட நேதாஜி, உலகின் மிகக் கொடுமையான ரஷ்யாவின் குளிர் பிரதேசத்தில் உள்ள சைபீரிய சிறையில் சித்ரவதைப் படுத்தியதற்கான சாட்சிகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும்கூட, அன்றைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமைதி காத்தது ஏன்? நேதாஜி பற்றிய உண்மைகள் வெளியே தெரிந்தால், அவரது புகழ் நாடு முழுவதும் பரவிவிடும் என்பதில் முந்தைய காங்கிரஸ் அரசும், இன்றைய மோடி அரசும் தெளிவாக உள்ளன. இன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்ற 117-வது பிறந்த நாள் விழாவில் உரை ஆற்றியபோது, நேதாஜி மறைவு குறித்த உண்மைகளை அறிந்துகொள்ள, இந்தியாவின் அனைத்து மக்களும் கவலைப்படுகின்றனர். எனவே, உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறினார். ஆனால், தற்போது அதுபற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

1945 ஆகஸ்ட் 18-க்குப் பின் நேதாஜி எங்கே இருந்தார்? எப்படி நடத்தப்பட்டார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நேதாஜியின் படம் இல்லாத வீடே கிடையாது. எனவே, எங்கள் நெஞ்சில் நிறைந்த நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக வெளியிடுவதோடு அந்த வங்கத்து சிங்கம் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதியையும் தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், சகோதரி மம்தா தலைமையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்' என்று கர்ஜித்து முடித்தார்.

அவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பேசினார். 'தேசிய உணர்வுமிக்க இந்தியர்களின் உணர்ச்சிகளோடு மத்திய அரசு விளையாடுவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. மேற்கு வங்கமும், தமிழகமும் வீரத்தில் வளர்ந்தவை. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அனைத்து நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஹிட்லரையே நேரில் பார்த்து எதிர்ப்பு தெரிவிக்கும் ஆற்றல் இருந்த ஒரே தலைமை. எனவே, இந்த அரசு, அந்த ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட மம்தா பானர்ஜியோடும் வைகோஜியோடும் சேர்ந்து அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து போராட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

நேதாஜி சர்ச்சைக்கு மீண்டும் உயிர் வந்துவிட்டது. இதேபோன்ற போராட்டம் டெல்லியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்!

மா.அ.மோகன் பிரபாகரன், ர.நந்தகுமார்

படங்கள்: ஹரிஹரன்