மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு மதவாதப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி தொல்.திருமாவளவன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது. கடந்த 23-ம் தேதி சென்னை துறைமுகத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்த தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை!

மேடையிலிருந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒன்றாக கைகோர்த்து போஸ் கொடுத்தனர். அதன் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச ஆரம்பித்தார். ''இங்கு மேலே உயர்த்தப்பட்ட கைகள் ஒருபோதும் கீழே தாழாது. கொள்கை, லட்சியத்துக்காக எந்தவொரு கருவிகளையும் ஏந்தத் தயாராக இருக்கும். கட்சியை வளர்ப்பதற்காகப் பிரபலங்களைத் தேடிப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைப் பார்க்கிறேன். மறைமுக திட்டத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மதமாற்றம் மூலம் கலவர பூமியாக்கி வருகின்றனர். மோடி வித்தை நீண்ட காலத்துக்குப் பலிக்காது என்பதை உணர வேண்டும். மோடியின் கழுத்தைச் சுற்றிய பாம்புதான் ஆர்.எஸ்.எஸ். அதைக் காட்டித்தான் மகுடி வாசித்தார். தற்போது அதுவே அவருடைய கழுத்தை நெரிக்கிறது. சாதியற்ற, மதச்சார்ப்பற்ற ஓர் அணியை உருவாக்க உள்ளோம். நம்மை இணைத்த பாசிசவாதிகளுக்கு நன்றி சொல்வோம். பாசிச கழுத்தைப் பிடித்து நெருக்குவோம்'' என்று ஆவேசமாக முடித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ''இது சாதாரண ஆபத்து அல்ல. தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவற்றை அழித்து ஒழிக்க முயற்சிக்கிறது. ஆட்சிக்கு ஆணிவேரே உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். அதை உணர வேண்டியது மிக அவசியம். 'மதம் சார்ந்து போய்விட்டால், நாடு நன்றாக இருக்காது’ என்றவர் அண்ணல் அம்பேத்கர். ஆட்சியைக் கொடுத்தவர்களிடம் அதனை மீண்டும் எடுப்பது மிகக் கடினம். தேர்தல் காலத்தில் மக்கள் முன்னிலையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதைப்பற்றி எதுவும் கவலையில்லாமல் தெருக்கூட்டிக் கொண்டிருக்கிறார் மோடி'' என்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், ''ஆர்.எஸ்.எஸ் இந்தியர்களுக்கு மட்டும் எதிரியல்ல. இந்துக்களுக்கும் எதிரி. ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லாத இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். காரணம், அங்கு சாதியமும் ஆணாதிக்கமும்தான் நிறைந்திருக்கிறது'' என்று பேசினார்.

எழுத்தாளர் அ.மார்க்ஸ், ''இந்த ஆட்சி மாற்றம் நிரந்தரமானது அல்ல. அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றனர். ஜனநாயக, சோஷலிச நெறிகளைக் கூறுபோட்டு ஒழிக்க வேண்டும் என்று கிளம்பி இருக்கின்றனர்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் திருமாவளவன், ''இந்தப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசின் இந்துத்துவ பாசிச வெறியை எதிர்க்க நாங்கள் இருக்கிறோம் என்பதை பதிவு செய்கிறோம். தேசத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நடக்கும் என்று கணித்துத் தேர்தலுக்கு முன்பே கூறினோம். எங்கள் குரல் எடுபடவில்லை. அவர்களோடு கைகோர்த்தவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மோடி பிரதமராவதற்கு முன், இந்தியாவில் இதுபோன்ற சூழல் இருந்ததா? இல்லையே... விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் விஷ விதைகளைப் பரப்பி வருகிறார். மன்மோகன் சிங்கை, 'மெளன சிங்’ என்றோம். இப்போது அது மோடிக்கும் பொருந்தும். 'மெளன மோடி’யாக இருக்கிறார். இந்தியாவில் 100 சதவிகிதம் இந்துக்களே இருக்க வேண்டும் என்று மதவாத அமைப்புகள் கொக்கரிக்கின்றன. அவர்களுக்கு யார் அந்த தைரியத்தைக் கொடுத்தது? மாநில கட்சித் தலைவர்களுக்கு இந்துத்துவாவை எதிர்க்கும் திறன் இல்லை. தமிழகத்தில் இந்துத்துவ மதவெறியை பரப்ப பல திட்டங்களை இந்தக் கும்பல் கையாள இருப்பதாகவும், எதிர் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பில் முதல்வர் வேட்பாளர் தயாராகிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து இருப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை அவர்கள் துவக்கி வைக்கலாம்'' என்று அதிரப் பேசினார்.

பி.ஜே.பியை கண்டிப்பதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் தலைமையிலான புதிய கூட்டணி விதையை விதைத்திருக்கிறார் திருமாவளவன்!

நா.இள.அறவாழி

படம்: சசிமாரீஷ்