சினிமா பிரபலங்களை நம்பி கட்சியை வளர்க்கும் நிலைமைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு விட்டதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் தலைமை, நாட்டுக்காக தியாகங்களை செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்கத் தவறிவிட்டதால்தான் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு நிற்கிறது என்கிற காட்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தென் மாவட்ட வளர்ச்சிக்காக மணிமுத்தாறு அணையைக் கட்ட தூண்டுகோலாக இருந்தவரான தியாகி கே.டி.கே.கோசல்ராமின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட எந்த முனைப்பும் காட்டப்படவில்லை என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர், கே.டி.கோசல்ராம். 1915-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பிறந்த அவர், தனது 15-வது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன், இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு தடவை மேலவை உறுப்பினராகவும் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர். அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாட காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதாக பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டியுள்ளன.

இதுபற்றி நம்மிடம் பேசிய 'பெருந்தலைவர் காமராஜர் மார்ஷல் நேசமணி பேரவை’யின் தலைவரான செந்தில், ''சுதந்திரப் போராட்டத்தில் தியாகி கே.டி.கோசல்ராமின் பங்கு அதிகம். 15 வயது சிறுவனாக இருந்தபோதே போராட்டங்களில் பங்கெடுத்து போலீஸாரிடம் அடி உதைகளை வாங்கியவர். 18 வயதில், ஜப்பானின் விடுதலைக்கு அந்த நாட்டில் தற்கொலைப்படை உருவாக்கப்பட்டதைப் பற்றிக் கேள்விப்பட்டு அதேபோல 'சுதந்திர சேனை’ என்கிற தற்கொலைப்படையைத் தொடங்கியவர்.

தீண்டாமையை எதிர்த்து 1945-ல் திருச்செந்தூர் கோயிலுக்குள் தலித்களுடன் ஆலயப் பிரவேசம் செய்தவர். சேது சமுத்திரத் திட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் முதன் முதலில் குரல் கொடுத்தவர். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகள் சிலர் வறுமையான நிலையில் இருப்பதை நேரில் பார்த்து அவர்களுக்காக பென்ஷன் திட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர். அப்படிப்பட்டவரை காங்கிரஸ் கட்சி அடியோடு மறந்துவிட்டது. அவரது நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரிடமும் கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவரான முத்து.ரமேஷ், ''பொதுவாக, தென் தமிழகம் தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழையை நம்பியே விவசாயம் இருந்தது. மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி கடலில் கலந்ததால் விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள். அதனால் மணிமுத்தாறு அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலத்திடம் கோரிக்கை வைத்து உள்ளார் கோசல்ராம். 'அதுக்கு 75 லட்சம் ரூபாய் செலவாகும். அதை கோசல்ராம் கொடுத்தால் உடனே கட்டிவிடலாம்’ என்று பக்தவத்சலம் சொல்லி உள்ளார். உடனே கோசல்ராம், 1 கோடியே 25 லட்சம் ரூபாயைத் திரட்டி நிதியாகக் கொடுத்துள்ளார். அதன் பிறகே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டு இருக்கிறது. காவிரியில் அணை கட்டிய பென்னி குயிக்குக்கு சிலை வைத்ததுபோல கோசல்ராமுக்கும் மணிமண்டபம் கட்டி அவரது முழு உருவச்சிலையை நிறுவி தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் இதுபற்றி கேட்டதற்கு, ''நாங்கள் எப்போதுமே தியாகிகளை மதிப்பவர்கள். எனது தலைமையில் 2011-ல் ஆறுமுகநேரியில் கே.டி.கோசல்ராமுக்கு முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. அதில், 'மணிமுத்தாறு அணை கண்ட மாவீரன்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறோம். மறைந்த தியாகிகளான ஏ.பி.சி.வீரபாகு, முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், கே.டி.கோசல்ராம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் ஒரே சமயத்தில் வருகிறது. அதனால் இதனை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக பிரமாண்டமான முறையில் தூத்துக்குடியில் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும். நாங்கள் தியாகிகளை மறந்துவிட்டோம் என்று சொல்வது காழ்ப்பு உணர்ச்சியால் பேசும் சிலரது வாதம். எங்களின் முகவரியே தியாகிகள்தான். அவர்களுக்குத் தகுந்த மரியாதையை நிச்சயமாக செய்வோம். அதுபற்றி யாரும் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்றார் காட்டமாக.

நல்ல விஷயங்களை அடுத்தவர்கள் சொல்வதற்கு முன்பு செய்ய வேண்டாமா?

ஆண்டனிராஜ்

படங்கள்: ஏ.சிதம்பரம்