Published:Updated:

சிறையில் கைதிகளிடம் செல்போன்... அறையில் போலீஸ் அதிரடி சோதனை!

சிறையில் கைதிகளிடம் செல்போன்... அறையில் போலீஸ் அதிரடி சோதனை!
சிறையில் கைதிகளிடம் செல்போன்... அறையில் போலீஸ் அதிரடி சோதனை!
சிறையில் கைதிகளிடம் செல்போன்... அறையில் போலீஸ் அதிரடி சோதனை!

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், கைதிகளிடம் தடைசெய்யப்பட்ட பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில், போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில், தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் 1,500 பேர் உள்ளனர். தனித்தனி ப்ளாக்குகளில் உள்ள இந்தக் கைதிகளிடம் செல்போன், புகையிலைப் பொருள்கள்  பயன்பாடு இருப்பதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, சிறைச்சாலையில் அதிரடி சோதனை நடத்துமாறு நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையாளர் கபில்குமார் சாராட்கர் உத்தரவிட்டார்.

சிறையில் கைதிகளிடம் செல்போன்... அறையில் போலீஸ் அதிரடி சோதனை!

அதையடுத்து, நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் சுகுணாசிங், உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீஸார் அடங்கிய 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களில், சிறைத்துறை அதிகாரிகளும் இடம்பெற்றனர். காவல்துறை மற்றும் சிறைத்துறையினர் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனை, அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கியது.

சிறையின் ஒவ்வொரு பகுதியிலும் இந்தக் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட பொருள்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து சிறைச்சாலைக்குள் கண்காணிப்பு நடைபெறும் எனச் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதுபற்றி காவல்துறையினரிடம் பேசியபோது, ‘இது வழக்கமான சோதனை மட்டுமே. இந்தச் சோதனையின்போது, சிறைச்சாலையிலிருந்து செல்போன், பீடி,சிகரெட் உள்ளிட்ட எந்தத் தடைசெய்யப்பட்ட பொருளும் கிடைக்கவில்லை’ எனக் கூறினார்கள்.