Published:Updated:

எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் குடகு தனியார் விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்!

தினேஷ் ராமையா
எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் குடகு தனியார் விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்!
எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் குடகு தனியார் விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் விடுதி உரிமையாளருக்கு, மாநில போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் குடகு தனியார் விடுதிக்கு கர்நாடக போலீஸ் நோட்டீஸ்!


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த 19 எம்.எல்.ஏ-க்களும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதைத் தடுக்கவே கர்நாடக மாநிலத்துக்கு அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியில், தமிழகக் காவல்துறையினர் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், குடகில் உள்ள தனியார் விடுதியின் உரிமையாளருக்கு சந்திக்கோப்பா காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், தமிழக எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருப்பதுகுறித்து தகவல் தெரிவிக்காதது ஏன் என்றும், இதுகுறித்து மூன்று நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைச் சேர்ந்த பிரபலங்கள் ஒரு மாநிலத்துக்கு வரும்போது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறையினரின் பணியாகும்.