Published:Updated:

தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணன் - சபாநாயகர் தனபால் சந்திப்பு!

ர.பரத் ராஜ்
தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணன் - சபாநாயகர் தனபால் சந்திப்பு!
தமிழக தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணன் - சபாநாயகர் தனபால் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுடன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அ.தி.மு.க-வில் உட்கட்சி குழப்பம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று சபாநாயகர் தனபாலுடன் தலைமை வழக்கறிஞர் ஆலோசனை நடத்தினர்.

சில வாரங்களுக்கு முன்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று எழுத்துபூர்வமாக மனு அளித்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால், 'முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும், வரும் 14-ம் தேதி, கட்டாயம் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்' என்று கடந்த 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று முதல்வர் எடப்பாடி கூட்டிய அ.தி.மு.க பொதுக்குழுவில், 'சசிகலாவின் நியமனங்கள் எதுவும் செல்லாது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 'எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பது ஜெயலலிதா வழி ஆட்சியே அல்ல. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டோம். விரைவில் தேர்தலை சந்திப்போம்' என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இப்படி அ.தி.மு.க-வின் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.