Published:Updated:

காவிரி வழக்கு: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

காவிரி வழக்கு: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
காவிரி வழக்கு: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
காவிரி வழக்கு: பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டுவதில் பிரதமர் மெத்தனமாக  செயல்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும், காவிரியில்  தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு தாக்கல்  செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், எம்.பி.லோகுர் முன்னிலை  யில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் ஆனார். அவரிடம்  நீதிபதிகள்,"காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுவதற்கான தேதி குறிக்கப்பட்டு  விட்டதா?” என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்,”இன்னும் தேதி குறிக்கப்படவில்லை.மாநில அரசுகளிடம் தேதி  கேட்டிருக்கிறோம் " என்றார். இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், காவிரி நதிநீர்  ஆணையத்தின் தலைவராக பிரதமர் இருக்கும்போது ஏன் இவ்வளவு தாமதம்  செய்கிறீர்கள்? என்று கண்டனம் தெரிவித்தார்.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர்,"மாநில அரசுகளுக்கு பிரதமர் அலுவலகம் எந்த  கடிதமும் எழுதவில்லை.நீர்வளத்துறை உதவி அதிகாரி ஒருவர் மூலம் மாநிலங்களிடம்  தேதி கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்"என்றார்.

இதையடுத்து நீதிபதிகள்,"பிரதமர் அலுவலகம் என்று பார்க்கிறோம்.இல்லையெனில்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ”என்றனர்.தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞரை  பார்த்து,"இந்த வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில் என்ன கூறப்பட்டுள்ளது  என்று தெரியுமா?"என்று கேட்டனர்.

அதற்கு அவர்,படித்து பார்க்கவில்லை என்று சொன்னார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,"கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காவிரி  நதிநீர்  ஆணையத்தையே செல்லாது என்று கூறி உள்ளது.மத்திய அரசு ஏன் இந்த  பிரச்னையில் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறத? காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டும்  தேதியை மத்திய அரசு குறிக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே தேதியை தீர்மானித்து  அறிவிக்கும்”என்று எச்சரித்தனர்.

இதனால் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மத்திய அரசு வழக்கறிஞர் வருகிற 7 -ம் தேதிக்குள் அனைத்து விவரங்களுடன் பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து  வழக்கு விசாரணையை வருகிற அன்றைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.