Published:Updated:

அதிக மகசூல் பெறும் 36 விவசாயிகளுக்கு பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு!

அதிக மகசூல் பெறும் 36 விவசாயிகளுக்கு பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு!
அதிக மகசூல் பெறும் 36 விவசாயிகளுக்கு பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு!
அதிக மகசூல் பெறும் 36 விவசாயிகளுக்கு பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை:  பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் 36 விவசாயிகளுக்கு பரிசு  வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"நவீன தொழில்  நுட்பங்களை பயன்படுத்தி, மானாவாரி நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு  வகைகளில் உற்பத்தியை அதிகரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நெல்  (மானாவாரி), சோளம் (மானாவாரி மற்றும் இறவை), கேழ்வரகு (மானாவாரி மற்றும்  இறவை) சாமை (மானாவாரி), துவரை (மானாவாரி மற்றும் இறவை), பச்சைப் பயறு  (மானாவாரி மற்றும் இறவை) மற்றும் உளுந்து (மானாவாரி மற்றும் இறவை)

ஆகிய பயிர்களின் சாகுபடியில் அதிகமான மகசூல் பெறும் விவசாயிகளை தேர்வு செய்து,  ஒவ்வொரு இனத்திற்கும் முதல் பரிசாக 50,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000  ரூபாயும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இவ்விருதுகள் வழங்குவதற்காக 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் தமிழகத்தில் 36 விவசாயிகளுக்கு  பரிசுத் தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து நெல் (மானாவாரி), சிறு  தானியங்கள் மற்றும் பயறு வகைகள் உற்பத்தித்திறனை அதிகரிக்க விவசாயிகளிடையே  விழிப்புணர்வும், போட்டி மனப்பான்மையும் ஏற்பட்டு, உற்பத்தி அதிகரிக்க வழிவகை  ஏற்படும். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்வில் மலர்ச்சியும் ஏற்படும்” என்று   கூறப்பட்டுள்ளது.