Published:Updated:

நிலக்கரி முறைகேடு: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நிலக்கரி முறைகேடு: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நிலக்கரி முறைகேடு: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நிலக்கரி முறைகேடு: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக பிரதமர் ராஜினாமா செய்ய  வலியுறுத்தி பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சியினர் மேற்கொண்ட அமளியால்  நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நிலக்கரி சுரங்க முறை கேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக  வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது.

இதனால் நாடாளுமன்றத்தில் கடந்த 8 நாட்களாக அமளி ஏற்பட்டு அலுவல்கள் எதுவும்  நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள் விடுமுறைக்குப்பின் இன்று நாடாளுமன்றம்  கூடியபோது பா.ஜனதா கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

##~~##
இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.12 மணிக்கு கூடியபோதும் அதே  நிலை நீடித்ததால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிட்டையே மாநிலங்களவையிலும் இதே நிலை காரணமாக மதியம் 2 மணி வரை   ஒத்தி வைக்கப்பட்டது.

2 மணிக்கு கூடியபோதும் இதே நிலை நீடித்ததால்  இரண்டு அவைகளூம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.