Published:Updated:

ராஜபக்ச இந்திய வருகைக்கு கருணாநிதி எதிர்ப்பு!

ராஜபக்ச இந்திய  வருகைக்கு கருணாநிதி எதிர்ப்பு!
ராஜபக்ச இந்திய வருகைக்கு கருணாநிதி எதிர்ப்பு!
ராஜபக்ச இந்திய  வருகைக்கு கருணாநிதி எதிர்ப்பு!

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்தியா வருகைக்கு   திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று திமுக தலைமையமான அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி  இருக்கிறதே?

அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும்  கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இதற்காக போராட்டம் நடத்துவீர்களா?

போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது  பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து?


இதே ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று  தீர்மானம் போட்டவர் தானே? போர் என்றால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது  சகஜம் தான் என்று இலங்கை போர் நடந்தபோது சொன்னவர்தானே. அவருக்கு இலங்கை  தமிழர்களுக்காக பேச என்ன தார்மீக உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.