Published:Updated:

10 ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: சீமான்

சென்னை: 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய  வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தி  உள்ளார்.

10 ஆண்டுகளை கடந்த அரசியல் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி,நாம் தமிழர் கட்சி சார்பில்,சென்னை ஆயிரம்  விளக்கில் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் கலந்துகொண்டு பேசிய சீமான்,"தண்டணைக்  காலம் முடிந்த பின்னால் கடந்த 10 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அரசியல்  கைதிகளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க  வேண்டும். சிறையில் இல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல.

##~~##
கடந்த ஆட்சி காலத்தில் ஒன்றரை ஆண்டில் 5 முறை சிறை சென்றவன் நான்.நீண்ட  காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 54 இஸ்லாமிய தமிழ் சொந்தங்களை  உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தவர்கள் வெளியில்  இருக்கிறார்கள்.புதுச்சேரி காங்கிரசார்,என்னை இங்கு நுழைய விடமாட்டோம் என்றும்  புதுச்சேரி வந்து பேசக்கூடாது என்றும் கூறுகிறார்கள்.முதலில் காங்கிரஸ்காரர்கள்  நாடாளுமன்றத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக என்மீது குற்றம்  சாட்டுகின்றனர்.இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் தமிழர்களை  பயங்கரவாதிகளாகவும் நினைக்கிறார்கள்,இது மாறவேண்டும்”என்றார்.