Published:Updated:

ஜிப்மர் மருத்துவமனை: பிரதமருக்கு ஜெ. கடிதம்!

விகடன் விமர்சனக்குழு
ஜிப்மர் மருத்துவமனை: பிரதமருக்கு ஜெ. கடிதம்!
ஜிப்மர் மருத்துவமனை: பிரதமருக்கு ஜெ. கடிதம்!
ஜிப்மர் மருத்துவமனை: பிரதமருக்கு ஜெ. கடிதம்!

சென்னை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சேவையை தொடர வலியுறுத்தி  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"கடந்த 2008 ம் ஆண்டு  முதலே ஜிப்மரில் இலவச சேவையை தொடர அதிமுக வலியுறுத்தி வருகிறது.மருந்து  மற்றும் இதர பரிசோதனைகளுக்கு பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக சேவை செய்ய  உத்தரவிட வேண்டும்.

##~~##
இலவச சேவையால், புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள்  பெரும்பலன் அடைந்து வந்தனர். இலவச மருத்துவ சேவை திடீர் நிறுத்தத்தால்,  அம்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.