Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

குலசேகரன், வள்ளியூர்.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னர்களை வீழ்த்தியது எது?

கழுகார் பதில்கள்

அந்தப்புரமும் புத்திர பாசமும்!

##~##

அக்பர் இதற்கு நல்ல உதாரணம். பிறந்த பையனின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போர்க்களத்தில் இருந்தபடியே அக்பரின் பிறந்த நாளைக் கொண்டாடினார் அப்பா ஹுமாயூன். 'இவன் புகழ் கஸ்தூரி மணம் போல உலகம் முழுக்கப் பரவ வேண்டும்’ என்றார். அதைப் போலவே 69 ஆண்டுகள் வாழ்ந்த அக்பர், 49 ஆண்டுகள் மன்னராகவே இருந்தார். அவரை நொந்து நூலாக்கி மரணப்படுக்கையில் தள்ளியது ரெண்டு பேர். ஒருத்தி, அந்தப்புரத்தில் இருந்த மாஹம் அனாகா. தன் மகன் ஆதம்கானை வளர்க்க வேண்டும் என்பதற்காக அசைக்க முடியாத மாவீரனான பைராம்கான் பற்றி பொய்களைப் புனைந்து அக்பரிடம் இருந்து பிரித்தாள்.

இன்னோர் ஆள், அக்பரின் மகன் சலீம். 'அப்பாவின் ஆயுள் நீடிக்கிறதே’ என்று நித்தமும் புலம்பி, தனி அணி கட்டியவர் சலீம். இவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் அக்பர் படுக்கையில் சரிந்தார். இதுதான் பல மன்னர்களுக்கும் நடந்தது!

 மு.திருநாவுக்கரசு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

கழுகார் பதில்கள்

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே ஜெ.?

'நாங்கள் எதைச் செய்தாலும் அதைச் சீரழிப்பதே அ.தி.மு.க-வின் வேலை’ என்கிறாரே மு.க. இவர்கள் ரெண்டு பேருக்​குமே வேறு வேலையே இல்லையா?

 ராஜேஷ், நாகர்கோவில்.

கழுகார் பதில்கள்

இலங்கையில் 30 ஆண்டுகளாக இருந்த அவசரகாலத் தடை சட்டத்தை ராஜபக்ஷே வாபஸ் வாங்கிவிட்டது நல்ல விஷயம்தானே?

இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது என்பதைக்காட்ட ராஜபக்ஷே நடத்தும் நாடகம் இது!

மட்டக்களப்பு மாவட்ட எம்.பி-யான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடந்த வாரம் தமிழகம் வந்திருந்தார். 'அவசர கால தடை சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டு, பயங்கரவாத தடை சட்டத்தை ராஜபக்ஷே பலப்படுத்திவிட்டார்!’ என்று சொல்லி​இருக்கிறார். எனவே, சட்டத்தின் பெயர் மட்டுமே மாறியுள்ளது.

அதைவிட யோகேஸ்வரன் சொல்லியிருக்கும் இன்னொரு செய்தி அதிர்ச்சிக்கு உரியது. '50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா பணம் கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரம் வீடுகள் கூட கட்டித் தரப்படவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். இந்தியா இதையாவது தட்டிக்கேட்க வேண்டும்!

ஆர்.சண்முகநாதன், வந்தவாசி.

கழுகார் பதில்கள்

  'பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட மூவர் குறித்து தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது’ என்கிறாரே மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்?

ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளும் வழிமொழிந்த தீர்மானம், குடியரசுத் தலைவருக்குத்தான். எனவே, அது ஏற்கத் தக்கதா இல்லையா என அவர்தான் தீர்மானிக்கவேண்டும். மேலும், ஒரு மாநில சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ஓர் அமைச்சர், அதுவும் சட்ட அமைச்சர் கருத்துச் சொல்வது அபத்தமானது. ஜெயலலிதா மீதான எரிச்சல் மட்டுமே அவரது வார்த்தைகளில் தெரிகிறது!

 ஆனந்தி, காரைக்கால்.

கழுகார் பதில்கள்

  அண்ணா ஹஜாரே பற்றி, அருந்ததிராய் எழுதிய கட்டுரையைப் படித்தீரா?

ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடங்கியவர் என்கிற அடிப்படையில் ஹஜாரே ஏற்கத் தக்கவர்தான். ஆனால், அருந்ததி சொன்னதில் மிக முக்கியமான விமர்சனம் இருக்கிறது.

'அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஆனால், ஹஜாரேயின் ஜன்லோக்பால் சட்டம், முற்றதிகாரம் கொண்ட கொடிய சட்டமாக இருக்கிறது. ஏற்கெனவே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆள்கிறது. ஜன்லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது’ என்று குற்றம் சாட்டுகிறார்.

'காந்திய நெறி சார்ந்ததாக இச்சட்டம் வடிவமைக்கப்​படவில்லை!’ என்று அருந்ததி சொல்​வதற்கு அண்ணாவிடமிருந்து இதுவரை பதில் இல்லை!

 க.முனுசாமி, திண்டுக்கல்.

கழுகார் பதில்கள்

ஸ்டாலின் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?

'கடந்த ஐந்தாண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளுக்குப் போனதுதான் எனது வேலை. இப்போது தி.மு.க. தோழர்களை சிறை சிறையாகப் போய்ப் பார்ப்பதுதான் எனது வேலை’ என்று உங்கள் ஊரில் தான் ஸ்டாலினே ஒப்புக் கொண்டுள்ளாரே!

 குணசீலன், விருதுநகர்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

'தமிழகத்தின் அண்ணா ஹஜாரே!’ என்று நடிகர் விஜய்யை அவரது ரசிகர் மன்றத் தலைவர் 'வேலாயுதம்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளாரே!

நல்லவேளை! இது அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது! இதைக் கேள்விப்பட்டு அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!

 வேதாச்சலம், திருச்செங்கோடு.

கழுகார் பதில்கள்

நிலப்பறிப்பு வழக்கு டல் அடிப்பது போல் தெரிகிறதே?

இதோ அடுத்து வரப்போகிறது, சொத்துக் குவிப்பு வழக்குகள்!

 கலை அரசன், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கும் புதிய சட்டம் வரப் போகிறதாமே?

ஆமாம்! 'கிரிமினல்கள் இல்லாத அரசியல் _ சட்ட மசோதா’ என்று இதற்குப் பெயர். கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களது வேட்பு மனுக்களை இந்தச் சட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்து விடுவார்கள். இன்றைய நாடாளுமன்றத்திலேயே 162 எம்.பி-க்கள் மீது குற்றப்புகார்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால் வரவேற்க வேண்டிய சட்டம் இது. இன்னும் மூன்று வாரத்தில் தாக்கல் ஆகப் போகிறது.

 வாசுகி, ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்

பணமா... குணமா... எது முக்கியம்?

'பணத்தால் அழகான நாயை விலைக்கு வாங்கலாம். ஆனால், அதன் வாலை பணத்தால் ஆட்டுவிக்க முடியாது’ என்பார்கள். நல்லவர்களைப் பார்த்தால் நாய் வாலை நளினமாக ஆட்டும். திருடர்களைப் பார்த்தால் வால் வெடைக்கும். எது முக்கியம் என்று தெரிகிறதா?

 கரிகால் வளவன், கோவில்பட்டி.

கழுகார் பதில்கள்

கேரளாவில் முதலமைச்சரின் குறை தீர்ப்பு கால்சென்டருக்கு நல்ல வரவேற்பாமே?

  முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கால் சென்டரை செப்டம்பர் 1-ம் தேதி திறந்தார்கள். முதல் நாளே 2.25 லட்சம் மக்கள் இந்தச் சேவைக்குள் நுழைந்தார்கள். இதை அரசு எதிர்பார்க்கவில்லை. அன்று மட்டுமே 4 ஆயிரம் புகார்கள் பதிவாகி உள்ளன. எல்லாப் புகார்களுக்கும் ஒரு மாதத்துக்குள்  பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் உம்மன் சாண்டி. ஜெயலலிதாவும் இதை அமல்படுத்தலாம்!

 பிரவீன்குமார், திண்டிவனம்.

கழுகார் பதில்கள்

அண்ணா ஹஜாரேவின் வாழ்க்கை படமாகிறதாமே?

வில்லன் யார் மன்மோகன் சிங்கா? ராகுல் காந்தியா?

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism