Published:Updated:

தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!

குருபிரசாத்
தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!
தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!

மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருப்பவர், தமிழிசை சௌந்தரராஜன். இவர், கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அதில் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது, நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம் நடத்திவருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜனை நியமித்துள்ளது, மத்திய அரசு.


இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் கீழ் இயங்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. அந்தப் பதவியில் தமிழிசை சௌந்தரராஜன் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதையடுத்து, அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.