Published:Updated:

"தமிழக அரசுக்குத் திராணி இல்லை" - குற்றம் சாட்டும் தீபா!

சி.மீனாட்சி சுந்தரம்
"தமிழக அரசுக்குத் திராணி இல்லை" - குற்றம் சாட்டும் தீபா!
"தமிழக அரசுக்குத் திராணி இல்லை" - குற்றம் சாட்டும் தீபா!

பல்வேறு கருத்து வேறுபாடுகளால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது கணவன் மாதவனும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் இருவரும் கலந்துபேசி ஒன்றிணைகிறோம் என அறிவித்தனர். பின்னர், இரவு 12.20 மணியளவில், இருவரும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தனர். அங்கு, மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திய பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தீபா.

அப்போது அவர் , “ பல்வேறு சூழ்ச்சி வலைகளின் மத்தியில், நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி, பெரும்பான்மையை இழந்த ஆட்சியாக உள்ளது. எனவே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்பட்சத்தில், அது நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியே?. தினகரன் தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டுவருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே, தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில், பொதுமக்கள் என்னை ஆதரிப்பார்கள். நீட் விவகாரத்தில் ஒரு மாணவியை இழந்தும் இன்னும் அதிலிருந்து விலக்கு பெற்றுத் தர தமிழக அரசுக்குத் திராணி இல்லை” என்றார்.