Published:Updated:

வழக்கறிஞர்களின் சேமநல நிதி உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ர.பரத் ராஜ்
வழக்கறிஞர்களின் சேமநல நிதி உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வழக்கறிஞர்களின் சேமநல நிதி உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் 125-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சி, இன்று சென்னையில் இருக்கும் பாரிமுனையில் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'நீதி என்பது அரசியல் சட்டம் அனைவருக்கும் அளித்திருக்கும் அடிப்படை உரிமை. இந்தியாவில், மிகச்சிறந்த கட்டடம் என சென்னை உயர் நீதிமன்றம் போற்றப்படுகிறது. அதன் 125-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுவது மிகவும் பெருமைக்குரியது. நீதித்துறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட புதிய நீதிமன்றங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும். சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது' என்று கூறினார்.