Published:Updated:

ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்குச் செல்வோம்..! தங்க தமிழ்ச்செல்வன் உறுதி

ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்குச் செல்வோம்..! தங்க தமிழ்ச்செல்வன் உறுதி
ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்குச் செல்வோம்..! தங்க தமிழ்ச்செல்வன் உறுதி

'ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்கு வர வேண்டும் என்று தொகுதி மக்கள் உத்தரவிட்டுள்ளனர்' என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்குச் செல்வோம்..! தங்க தமிழ்ச்செல்வன் உறுதி


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்த பிறகு, சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் கட்சியை விட்டு விலக்குவதாக அறிவித்தனர். அதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கலைப்பதற்கு டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக முயற்சிசெய்துவருகிறார். அதற்காக, டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் தொகுதியில் இல்லாமல் கர்நாடகாவில் தங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ''வரும் 20-ம் தேதி டி.டி.வி.தினகரனுடன் இணைந்து எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சசிகலாவைச் சந்திக்க உள்ளோம். ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கினால் முதலில் பாதிக்கப்படுவது எடப்பாடி பழனிசாமிதான். கட்சிதான் எங்களுக்கு முக்கியம். ஆட்சியைக் கலைத்துவிட்டுத்தான் ஊருக்கு வர வேண்டும் என்று தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்''.