Published:Updated:

பைக் வைத்திருப்பவர்களால் பெட்ரோல் வாங்க முடியாதா? - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பிரேம் குமார் எஸ்.கே.
பைக் வைத்திருப்பவர்களால் பெட்ரோல் வாங்க முடியாதா? - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
பைக் வைத்திருப்பவர்களால் பெட்ரோல் வாங்க முடியாதா? - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

'பெட்ரோல் என்பது கார், பைக் வைத்திருப்பவர்களுக்குதான் தேவை. கார், பைக் வைத்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக பசியில் வாடுபவர்கள் அல்ல’ என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யத் தொடங்கிய பிறகு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் புதிதாக மத்திய அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கும் அல்போன்ஸ் கண்ணந்தனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாங்கள் அடித்தட்டு மக்களின் நலன், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், அனைத்து மக்களுக்கும் வீடு மற்றும் கழிவறை போன்ற அத்தியாவசியத் திட்டங்களைச் செயல்படுத்தத் தான் இருக்கிறோம்’ என்றார். 

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துள்ளாகி இருக்கிறது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஹோட்டலில் விலை அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டிலே சமைத்து சாப்பிட வேண்டியதுதானே’ என்ற சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு மத்திய  அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.