Published:Updated:

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்..! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கார்த்திக் துரைமகாராஜன்.சி
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்..! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்..! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பெரும்பான்மை நிரூபிக்கக் கோரும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நல்ல செய்தி வராவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்..! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துவிட்டது அ.தி.மு.க அரசு. தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத கட்சி ஆளுவதற்கு ஆளுநர் எப்படி அனுமதி தருகிறார். நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்பவைத்து மத்திய அரசு கழுத்தறுத்துவிட்டது. நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை நுழைக்கப் பார்க்கிறது மத்திய அரசு.

அதை அ.தி.மு.க அரசு வேடிக்கைப் பார்க்கிறது. பெரும்பான்மை தொடர்பாக நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்பார்த்ததுபோல வராவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். திருப்பூர் கன்டெய்னர்களில் 500 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதன் நிலை என்ன? தி.மு.க எப்போது ஆட்சிக்கு வரும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது' என்று தெரிவித்தார்.