Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

த்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துக் கணக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருப்பது, ஒரு நல்ல ஆரம்பம். கடும் வற்புறுத்தலுக்குப் பிறகும்கூட சில அமைச்சர்கள் இன்னமும் தங்களின் சொத்துக்கள்பற்றி வாய் திறக்காமல் இருப்பது, திருஷ்டிப்புள்ளி!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நேரத்தில், தங்கள் பெயரிலும் தங்கள் மனைவியரின் பெயர்களிலும் உள்ள சொத்துக்களை மட்டுமே கணக்கில் காட்டி மத்திய அமைச்சர்கள் தங்கள் பட்டியலை முடித்துக்கொண்டது சரிதானா என்ற கேள்வி எழாமல் இல்லை. மதிப்பான அரசுப் பொறுப்பில் இருக்கும் இவர்கள், தங்கள் சுற்றத்தாரின் சொத்துக்களைப் பற்றியும் சொல்லும்போதுதான் இந்த நல்ல முயற்சி முழுமை அடையும் என்று மக்கள் கருதுவதில் தவறேதும் இல்லையே?

மத்திய சம்பள கமிஷன், எம்.பி-க்களின் சம்பளம் மற்றும் சலுகை உட்பட அனைத்து விஷயங்களிலும் டெல்லியுடன் ஒப்பிட்டு கோரிக்கை எழுப்புவது மாநில அரசுகளின் தொன்றுதொட்ட வழக்கம். சலுகைகளுக்குப் போராடுவதுபோலவே, பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும்  மாநில அரசுகள் அக்கறை காட்ட வேண்டும். மாநில அரசுகளின் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் தங்களின் மனைவி, மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோரின் சொத்துக்களை உரிய ஆவணங்களுடன் வெளிப்படுத்தினால்தானே, மக்களிடையே நம்பிக்கை பிறக்கும்?  

வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாகப் பதிவான வழக்கு சூடு பிடித்திருக்கும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா தன் சொத்துக் கணக்கை அறிவித்திருப்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம்.

அண்மைக் காலமாகவே அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும்போது, அவர்களுக்கு வலது-இடதுகரங்களாக விளங்கிய அதிகாரிகளும் உடன் சிக்கிக் கொள்வதைப் பார்க்கிறோம். பல சமயங்களில் தவறுக்குப் பாதை போட்டுக் கொடுப்பதே அந்த அதிகாரிகளின் 'மதி யூகம்’ என்பதையும் அறிகிறோம். எனவே, குறிப்பிட்ட அதிகார அந்தஸ்துக்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளும் தங்கள் சொத்துக் கணக்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாமே!

சரியான விஷயங்களைச் சரியாகச் செய்யும்போதுதான் அதற்குப் பெயர்  முன்னேற்றம். இல்லையேல் அது வெறும் நாடகம்... கண்துடைப்பு!