Published:Updated:

திருப்பூரில் நாளை அதிமுக உண்ணாவிரதம்

திருப்பூரில் நாளை அதிமுக உண்ணாவிரதம்

சென்னை, பிப்.10,2011

சாயப்பட்டறைகள் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி நாளை திருப்பூரில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ##~~##

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூரில் உள்ள அனைத்து சாய,  லவை ஆலைகளின் கழிவுநீர் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றில் கலப்பதை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடுத்து நிறுத்தாததன் காரணமாக, அனைத்து ஆலைகளையும் மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த ஆலைகளை நம்பி இருக்கும் பின்னலாடை தொழிலும் முடங்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. பின்னலாடைத் தொழில் முடங்கினால் ஒரு நாளைக்கு 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும், அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே லட்சக்கணக்கான தொழி லாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வந்த திருப்பூர் மாவட்ட சாய, சலவை ஆலைகள் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில், 11.2.2011 வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் நகர ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள குமரன் சிலை அருகில்  மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

அடுத்த கட்டுரைக்கு