தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தராதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் படைத்த தகவல் ஆணையம், தகவல் கேட்டவரையே ஜெயிலுக்குள் அனுப்பி வைத்திருக்கும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது. தகவல் ஆணையர்கள் முன்பு அமர்ந்து பேசியதற்காக சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் தகவல் உரிமை போராளி சிவ இளங்கோ.

ஒளிவு மறைவில்லாத, லஞ்சம்ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெறக் கொண்டு வரப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன்படி, தகவல் கேட்டுக் கிடைக்காவிட்டால் தகவல் ஆணையத்தில் முறையிடலாம். தகவல் தரவில்லை என்றால், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 'அரசின் சாதனை விளம்பரங்களுக்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு?’ என்று தகவல் கேட்டிருக்கிறார் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ. தகவல் தராததால் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போதுதான் பிரச்னை ஏற்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இளங்கோவனிடம் பேசினோம். ''என் மனுவை தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதியும் ஆணையர் அக்பர் அலியும் விசாரித்தார்கள். அப்போது நான் அமர்ந்துகொண்டு பதில் அளித்தேன். 'யாரைக் கேட்டு உட்கார்ந்தீங்க... நின்றுகொண்டுதான் பேச வேண்டும்’ என்றார் ஸ்ரீபதி. 'அப்படி சட்டத்தில் குறிப்பிடவில்லை. அப்படி சொல்லப்பட்டிருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்’ என்றேன். ஆனால், அதற்கு அவரிடம் பதில் இல்லை. 'உட்கார்ந்தால் விசாரிக்க முடியாது’ எனச் சொல்லி அறையைவிட்டு கிளம்பியவர்கள் மின் தொடர்பைத் துண்டித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினேன். கைது செய்துவிட்டார்கள்! இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை'' என்றார்.

தகவல் ஆணையர்களுக்கு எதிராக இந்தியாவில் எங்குமே போராட்டம் நடந்தது இல்லை. ஸ்ரீபதி பதவியேற்ற நேரத்திலேயே போராட்டம் வெடித்தது. 'தகவல் அறியும் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ எனச் சொல்லி ஸ்ரீபதிக்கு எதிரான போராட்டம் ஐந்தாண்டுகளாகத் தொடர்கிறது. முந்தைய கருணாநிதி ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்தவச்ர் ஸ்ரீபதி. அப்போது அவருக்குப் பதவி நீட்டிப்பு தந்தார்கள். அதன்பிறகு தகவல் ஆணையர் பதவியும் தந்தார் கருணாநிதி. ஸ்ரீபதி பதவியேற்றபோது கவர்னர் மாளிகையில் போராட்டம் நடத்தி கைதானவரும் தகவல் அறியும் போராளியுமான கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சொத்துக் கணக்கை மாதவ் என்பவர் கேட்டபோது, 'தரமுடியாது’ என்று அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி சொன்னார். கடைசியில் நீதிமன்றம் சென்றுதான் வென்றோம். விஜிலன்ஸ் கமிஷனரச்ர் ஸ்ரீபதி இருந்தபோது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு தகவல் அறியும் சட்டத்தில் விதிவிலக்கு கொடுத்தார். இப்படி தகவல் அறியும் சட்டத்துக்கே எதிரானவரை 'தகவல் ஆணையராக நியமிக்கக் கூடாது’ என்றுதான் போராடினோம். அந்தப் போராட்டம் இன்றுவரை ஓயவில்லை. தகவல் ஆணையர்கள் அரசின் எந்த உதவியும் சலுகையும் பெறக் கூடாது என்பது விதி. அதையும் மீறி நெற்குன்றத்தில் அரசு வீட்டை வாங்க விண்ணப்பித்தார் ஸ்ரீபதி. இதை எதிர்த்து கவர்னரிடம் புகார் செய்தார் தகவல் உரிமை போராளி செல்வராஜ். குட்டு வெளிப்பட்டதும் 'விலை கட்டுப்படியாகவில்லை’ என பொய் காரணத்தைச் சொல்லி 'வீடு வேண்டாம்’ என்றார். தகவல் ஆணையங்கள், தேர்தல் கமிஷனைப் போலவே தன்னாட்சி அதிகாரம்கொண்ட ஓர் அமைப்பு. தமிழகத்தில் ஆணையம் முடங்கிப் போனதுக்குக் காரணமே அரசியல்தான். ஆட்சியாளர்களின் நலம் விரும்பிகளுக்கு போஸ்ட்டிங் போடும் இடமாக ஆணையங்கள் மாறிவிட்டன'' என்றார்.

இளங்கோ கைது செய்யப் பட்டதைக் கண்டித்து நாற்காலி தூக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் தகவல் அறியும் ஆர்வலர்கள். அவர்களிடம் பேசினோம். ''மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் ஆணையர்கள் மன்னராட்சியை நடத்தி வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தை அனுமதிக்க முடியாது. அங்கே பணிபுரிகிறவர்கள் ஒருமையில் பேசுவது, அலைக்கழிப்பது, நிற்கச் சொல்வது என உளவியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்து வருகிறார்கள். ஆணைய அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தினால் பஞ்சர் ஆக்கப்படுகிறது. விதிகளை மீறி ஆணையர்கள் சிவப்பு விளக்கு காரில் வலம் வருகிறார்கள். ஆன்லைன் முறை இல்லை. ஆண்டறிக்கை வைக்கப்படுவதில்லை. தகவல் தராதவர்களுக்கு அபராதம் விதிக்கப்ப டுவதில்லை இப்படி நிறைய குறைபாடுகள் இருக்கிறது'' என்றார்கள்.

ஸ்ரீபதியை சந்திக்க இரண்டு முறை சென்றும் அவர் அலுவலகத்தில் இல்லை. பதிவாளர் சின்னையா நாயுடுவிடம் பேசினோம். ''இளங்கோ அன்றைக்கு நடந்துகொண்ட முறை சரியில்லை. ஒருமையில் பேசினார். உட்கார்ந்து பேச அனுமதிக்கப்பட்டார். விசாரணையின் முடிவு உடனே தெரியவேண்டும் என சொல்லி உள்ளே உட்கார்ந்துகொண்டார். சிவப்பு விளக்கு பயன்படுத்துவதில் தவறு இல்லை. இதுபற்றி அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆண்டறிக்கை சமர்ப்பித்துவிட்டோம். அரசுதான் வெளியிட வேண்டும். தகவல் தராதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது'' என்றார்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன்