Published:Updated:

11 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

11 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
11 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
11 வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

புதுடெல்லி:  நிலக்கரி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு  பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து  மன்மோகன் சிங் விலக வேண்டும் என்று  பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,நாடாளுமன்றத்தின் இரு  அவைகளும் 11வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.

##~~##
இரு அவைகளும் இன்று காலை கூடியதும், பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  பிரதமர்  பதவி விலக வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பியதால் அவையை நடத்த முடியாத  நிலை ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை  ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும்,  இதே நிலை நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.