Published:Updated:

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 


முதலமைச்சர் பழனிசாமிமீது நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்கள், தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் தனியார் சொகுசுவிடுதியில் தங்கியுள்ளனர். 

அவர்களில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியும் ஒருவர். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித் தருவதாக 14 பேரிடம் ரூ.95 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக, செந்தில் பாலாஜிமீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். ராமகிருஷ்ணா நகர், தான்தோன்றிமலை, ராம் நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்துவருகிறது.  

அடுத்த கட்டுரைக்கு