Published:Updated:

ரஜினிக்கு முத்தம் கொடுத்த குஷியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சயித்ரா ரெட்டி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் சயித்ரா. அதாவது 'கல்யாணம் முதல் காதவல் வரை' சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் திடீரென அந்த சீரியலிலிருந்து விலக... அவருக்குப் பதிலாக சயித்ரா நடித்து வந்தார். சயித்ரா தற்போது 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவருடைய எவர் கிரீன் ஃபேவரைட் நடிகர் ரஜினி. அவரை எப்படியாவது ஒரு முறையேனும் பார்த்துவிட என்பது இவரது வாழ்நாளின் லட்சியமாக இருந்தது. அவரது ஆசை சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் 'காலா' திரைப்படத்தின் செய்தி வெளியானதிலிருந்து 'கபாலி' போன்றே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, 'காலா' படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், காலா ஷூட்டிங் ஸ்பாட்டில், ரஜினியைச் சந்தித்திருக்கிறார் சயித்ரா. சந்தித்ததோடு மட்டுமல்லாமல், அவரின் அன்பின் வெளிபாடாக, ரஜினிக்கு கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த முத்த செல்ஃபி இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. கடந்த சிலநாள்களாக வைரல் லிஸ்டில் இந்தப் படமும் இடம்பிடித்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு