Published:Updated:

எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி? விகடன் சர்வே முடிவு! #VikatanSurveyResult

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்  செயல்பாடுகள் எப்படி? விகடன் சர்வே முடிவு! #VikatanSurveyResult
எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி? விகடன் சர்வே முடிவு! #VikatanSurveyResult

எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி? விகடன் சர்வே முடிவு! #VikatanSurveyResult

மு.க.ஸ்டாலின் குறித்து சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் விகடன் சர்வே நடத்தப்பட்டது.  அதில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக தம் கடைமையைச் செய்கிறாரா? என்ற கேள்விக்கு சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 36.7 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவித்திருந்தனர். சிறப்பாகச் செயல்பட வில்லை என 30.8 சதவிகிதம் பேர் சொல்லி இருந்தனர். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று 32.5 சதவிகிதம் பேர் சொல்லி இருக்கின்றனர்.

சிறப்பான செயல்பாடு

தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக தம் கடைமையைச் செய்கிறாரா? என்ற கேள்விக்கு சிறப்பாகச் செயல்படுகிறார் என்று 36.7 சதவிகிதம் பேரும், சிறப்பாகச் செயல்பட வில்லை என்று 30.8 சதவிகிதம் பேரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று 32.5 சதவிகிதம் பேரும் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது அணுகு முறை எப்படி இருக்கிறது என்று கேட்டிருந்தோம். அதற்கு சரியான அணுகுமுறை என்று 62.6 சதவிகிதம் பேரும், தவறான அணுகு முறை என்று 37.4 சதவிகிதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நீட் கூட்டம் பலன் தராது

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் பலன் தருமா என்று கேட்டிருந்தோம். அதற்கு, பலன் தரும் என்று 40.7 சதவிகிதம் பேரும், பலன் தராது என்று 59.3 சதவிகிதம் பேரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு 1897 பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். நல்ல தலைமைப் பண்புகள் மிக்கவர் என்றும், எதிர்கட்சித் தலைவராக சிறப்பாகச் செயல்படுகிறார் என்றும் சில வாசகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

வாசகர்களின் கருத்துகள்;

"நீட் விவகாரத்தில் ஸ்டாலினின் பணியைக் குறை சொல்லமுடியாது. எனக்குத் தெரிந்து, உணர்ச்சிபூர்வமான ஜல்லிக்கட்டுப் பிரச்சனை நேரத்திலும் கூட ஸ்டாலின் மட்டும் நீட் குறித்தே பேசிக்கொண்டிருந்தார் என்பதும், அனிதா மரணத்திற்கு முன்பே கூட தம் மாணவரணி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வித்திட்டார் என்பதும் உண்மை. நீட் விவகாரம் இந்த அளவுக்கு பெரிதாக எழுவதற்கு முன்பே கூட ஸ்டாலின் அதன் மீது தனி கவனம் செலுத்தினார். ஆனாலும் தன்னைத்தேடிவந்த அனிதாவை ஒரு துருப்புச்சீட்டாக எடுத்து, அவரை வைத்தே பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி, அவர்களுடைய பெற்றோரோடும் கூட ஸ்டாலின் போராடி இருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால், அனிதா இன்னும் கூட நம்பிக்கையோடே இருந்திருப்பார்"

"கலைஞர் கருணாநிதி ஓய்வுக்குப் பிறகு தி.மு.க செயல் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் சட்டசபை செயல்பாடுகள், மத்திய - மாநில அரசுகளின் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜி.எஸ்.டி. மசோதா உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெறும் அவரது ஆர்ப்பாட்டங்கள். செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது."
"அரசியல் சாணக்கிய தனம் இன்னும் கொஞ்சம் வேண்டும்! அரசியலில்  எல்லோரையும் எளிதில் நம்பி விடுகின்றார் அது தவறு"
"இன்னும் வேகம், கடுமை வேண்டும். ஆள்வோருக்கு எதிராக உக்கிரமாகப் போராட வேண்டும். பெயரளவில் போராடுவது போன்ற தோற்றமே உள்ளது."
"சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே எதிர் கட்சிகளை ஒருங்கிணைத்து இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு