Published:Updated:

அதிகாரிகள் உறுதியை ஏற்று அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

அதிகாரிகள் உறுதியைத் தொடர்ந்து சாலை மறியல் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டனர் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் அரசுக்குச் சொந்தமான உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. சமீபத்தில் தனியார் நிறுவன உதவியுடன் இங்கு உப்பு சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது. தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  திறந்து வைத்த இந்த ஆலையைப் பராமரிக்கவும், இயக்கவும் தனியாருக்கு டெண்டர் விட அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்பினால் கால காலமாக அரசு உப்பு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும் எனக் கருதப்பட்டது.
 
இதையடுத்து, உப்புச் சுத்திகரிப்பு ஆலையினை நிர்வகிக்க தனியாருக்கு டெண்டர் விடக் கூடாது என வலியுறுத்தி சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பு நிறுவனத்தின் அருகில் திரண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடவிருந்த தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதிகாரிகள் உறுதியை ஏற்று அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

இந்தப் பேச்சுவார்த்தையின்போது உப்பு சுத்திகரிப்பு ஆலையைப் பராமரிக்க மற்றும் இயக்க மட்டுமே டெண்டர் கோரப்பட்டிருப்பதாகவும், இதனால் ஏற்கெனவே பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏதும் நேராது எனவும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக வரும் 26-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உப்பளத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். 

அடுத்த கட்டுரைக்கு